தாலி கட்ட மறுத்தார் என் கணவர்: சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு..

Web Ads

ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா. இவரும் 2-வது கணவரான விசாகன் வணங்காமுடியும் தங்களது 7-வது திருமணநாளை கொண்டாடினர். இச்சூழலில் சௌந்தர்யா பகிர்ந்த வார்த்தைகள் தற்போது வைரலாகி வருகிறது.

தன் கணவருடன் சேர்ந்து சௌந்தர்யா தெரிவிக்கையில், ‘முகூர்த்த நேரம் வந்துவிட்டது. ஆனால், மண்டபத்தில் (முதல் கணவரின் மகன்) வேத் கிருஷ்ணா இல்லை. வேத் பாப்பா இன்னும் வரவில்லையா என்று நான் அக்கா ஐஸ்வர்யாவிடம் கேட்டேன். அப்பொழுது இவர் என்னை பார்த்து, வேத் வரும் வரை நான் தாலி கட்ட மாட்டேன் சௌந்தர்யானு சொன்னார். ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எல்லோரும் ஒன்று தான்.

குழந்தைகளுக்கு எல்லாம் புரியும். அவர்களிடம் பொய் சொல்லவும் முடியாது, பொய்யாக நடந்து கொள்ளவும் முடியாது. எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். இவர் என்னை பார்த்துப்பார் என்று விசாகனிடம் உணர்ந்தான் வேத். அவனுக்கு அந்த பாதுகாப்பு உணர்வு கிடைத்தது.

முகூர்த்த நேரம் வந்துடுச்சுமானு வாத்தியார் என்னை பார்க்க, நான் என் அக்காவை பார்க்க, சரியாக அந்த நேரத்தில் மணடபத்தின் கதவு திறக்க வேத் வந்தான். அவன் மணமேடைக்கு வந்த பிறகே இவர் என் கழுத்தில் கட்டினார். அந்த விஷயத்தை நான் மறக்கவே மாட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

soundarya rajinikanth tells husband vishagan in wedding
soundarya rajinikanth tells husband vishagan in wedding