முதல் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்ட ‘பிரவுன் பியூட்டி’ மோனலிசா திட்டம்..

Web Ads

கடந்த ஆண்டு நிகழ்ந்த மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்றுக் கொண்டிருந்த 16 வயது பெண் மோனலிசா போஸ்லே என்ற பிரவுன் பியூட்டி வைரலானது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தன.

இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்பவர் மோனலிசாவை சந்தித்து ரூ. 1 லட்சம் முன்பணம் கொடுத்து அவரை இந்தி படத்தில் நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்தார். இதையடுத்து நகைக்கடை விளம்பரத்தில் நடித்தார் மோனலிசா. தற்போது அவர் ஒரு இந்தி படத்திலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தான் பிரபலமாக காரணமாக இருந்த இடமான பிரயாக்ராஜுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டிருக்கிறார் மோனலிசா. இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

Web Ad 2

‘கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லவிதமாக மாறி, நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது. என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன்.

என் சொந்த ஊரில் பெண்களுக்கான பள்ளியை கட்ட முடிவு செய்திருக்கிறேன். என் முதல் படத்தின் சம்பளத்தை வைத்து அந்த பள்ளியை கட்டப் போகிறேன். கல்வி மூலம் தான் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். அதனால், எனக்கு கிடைக்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்யப் போகிறேன்’ என கூறியுள்ளார். இதனால் பலரும் மோனலிசாவை பாராட்டி வருவது தற்போது வைரலாகி வருகிறது.

monalisa bhosle to build a school for girls in her native
monalisa bhosle to build a school for girls in her native