Soundarya Rajinikanth Celebrates Husband Birthday
Soundarya Rajinikanth Celebrates Husband Birthday

மகனுடன் சேர்ந்து கணவரின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

Soundarya Rajinikanth Celebrates Husband Birthday : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு வேத் என்ற ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் திமுகவை சேர்ந்த அரசியல் பிரபலம் ஒருவரின் மகனான விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மனைவியின் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் – தூவென துப்பும் நெட்டிசன்கள்.!

இரண்டாவது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது இவர் தன்னுடைய மகனுடன் சேர்ந்து கணவர் விசாகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நீங்கள் என்னுடைய புருஷனாக வந்ததற்கு நன்றி. ஹாப்பி பர்த்டே செல்லம் என கூறியுள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்தின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் அளித்துள்ள சில கமெண்ட்ஸ்

இந்த பதிவைப் பார்த்த ரசிகர் ஒருவர் சும்மா விடக்கூடாது என்ற டேக் ட்வீட் போடுங்க என கூறியுள்ளார். சாத்தான்குளம் பற்றி ரஜினிகாந்த் கூறிய இந்த டயலாக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாப்பி பர்த்டே மாப்பிள்ளை.. வேத்தை அன்பாக பார்த்துக் கொள்வதற்கு நன்றி என ரசிகை தெரிவித்துள்ளார்.

https://twitter.com/rajnikaanth12/status/1278238817401503744?s=19

மற்றொரு ரசிகர் பிறந்தநாளை கொண்டாட சத்தியமா விடவே கூடாது என ரஜினி டயலாக்கை வைத்தே கலாய்த்து உள்ளார்.