லுக்கை மாற்றி விடுதலை 2 படத்திற்கு தயாராகி உள்ளார் சூரி.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பரோட்டா சூரி ஆக பாப்புலர் ஆனவர் சூரி. அதன் பிறகு பல நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான இவர் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார்.

எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சூரி அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இதற்கான வேலைகளில் வெற்றி மாறன் முழு வீச்சில் இறங்கி இருக்கும் நிலையில் நடிகர் சூரியும் ஹேர் கட் செய்து குமரேசன் கெட்டப்பிற்கு மாறிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.