தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம்: சூரி பதிவு..

நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரி தற்போது நாயகனாக முத்திரை பதித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ‘மாமன்’ படம் வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து சூரி ஹீரோ​வாக நடித்து வரும் படம் ‘மண்டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்கும் இந்​தப் படம், படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்​மென்ட் சார்​பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கிறார்.

இப்​படத்​தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். எஸ்.ஆர்.க​திர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்​கு, இந்தி உள்​ளிட்ட மொழிகளில் கோடை​யில் இப்​படம் வெளி​யாக இருக்கிறது.

இந்​நிலை​யில், இதன் படப்​பிடிப்​பில் கடலில் படகின் மீது உடற்​பயிற்சி செய்​யும் வீடியோவை வெளி​யிட்​டுள்ள சூரி, ‘ரத்​தம், வியர்​வை, தளராத அர்ப்​பணிப்​பால் எழுதப்​படும் ஒரு பயணம் என்று ‘மண்​டாடி’ படத்​தை குறிப்பிட்​டுள்ளார். இந்த வீடியோ இணை​யத்​தில் வைரலாகி வருகிறது.

soori on mandaadi a journey written with unwavering dedication
soori on mandaadi a journey written with unwavering dedication