Summer Release
மாஸ்டருடன் முன்னணி நடிகரின் படம் மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னணி நடிகரின் பட ரிலீஸ் தள்ளி போயுள்ளது.

Soorarai Potru Movie Release Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். கைதி, மாநகரம் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படம் உலகம் முழுவதும் வரும் சம்மரில் ரிலீசாக உள்ளது.

மேலும் இப்படத்துடன் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று என்ற திரைப்படமும் மோதும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி சூரரை போற்று திரைப்படம் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 1 வாரத்திற்கு பிறகு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு படங்களும் மோதும், ரேஸில் ஜெயிக்க போவது விஜயா? சூர்யாவா? என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.