காதல் கணவர் நடித்த ‘தண்டேல்’ படம் வெளியீடு; சோபிதா இரட்டிப்பு மகிழ்ச்சி
நாக சைதன்யாவின் காதல் மனைவி செம குஷியில் உள்ளார். அது குறித்து அவர் தெரிவித்த சங்கதி பார்ப்போம்.
நாக சைதன்யா நடிப்பில் ‘தண்டேல்’ வெளியீட்டையொட்டி படக்குழுவினருக்கு சோபிதா கூறியதாவது:
‘மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ‘தண்டேல்’ படப்பிடிப்பு நடந்த நாட்களில் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும், கவனம் செலுத்தியவராகவும் இருந்தீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என தனது கணவரின் படத்தைப் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், சோபிதா மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நல்ல செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். ‘கடைசியாக உங்கள் தாடியை ஷேவ் செய்கிறீர்கள். முதல் முறையாக உங்கள் முகத்தைப் பார்க்கிறேன்’ எனவும் சோபிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். சோபிதாவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியுள்ள ‘தண்டேல்’ படம், ரொமாண்டிக் ஆக்ஷன்-திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டு உள்ளது.
மீனவர்களை மையப்படுத்திய கதைக்களம் ஆகும். ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு சென்று மாட்டிக் கொள்ள, பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது? திரும்பி வந்தார்களா?என்பதை விவரிக்கிறது. நாகா ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
மேலும், இருவரும் இணைந்து பாடிய பாடல் ஒன்று டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. அதுவும், சிவபெருமானைப் பற்றிய பாடல் அது. “நமோ நமச்சிவாய” என்ற பாடல் தான். இந்தப் பாடலை அனுராக் குல்கர்னி மற்றும் ஹரிப்ரீயா இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.