Web Ads

‘என் வழி திரிஷா வழி’: முரட்டு சிங்கிளாக ரெஜினா கெரியர்

‘என் வழி திரிஷா வழி’ என்கிறாரோ ரெஜினா? இது பற்றிய முகூர்த்த விவரம் பார்ப்போம்.

‘கண்ட நாள் முதல்’ திரைப்படம் மூலம் 2005-ஆம் ஆண்டு நடிகையாக தனது திரைப்பயணத்தை துவங்கினார். இந்த படத்தை தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தார். பிரபலமாக வாய்ப்பில்லை. பின்னர், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் வெற்றிப்படமாக அமைந்தபோதும், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இந்நிலையில் தான், ரெஜினா தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் “வில்லன் கேங்கில்” அர்ஜூனுக்கு மனைவியாக நடித்துள்ளார். இப்படம் ரெஜினாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், தற்போது 34 வயதாகும் ரெஜினாவிடம், திருமணம் எப்போது? என அக்கறையுடன் யார் கேட்டாலும்..

‘எப்போ கல்யாணம் பண்ண போற’ என்று என் அம்மாவே கேட்க மாட்டாங்க. அப்படியிருக்கும்போது,நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? நான் யாருடனும் உறவில் இருப்பது அவர்களுக்கு தான் ரொம்பவே கஷ்டம், எப்பவும் ஃப்ரண்ட்ஷிப் மட்டுமே ஈஸியான விஷயமா இருக்கும்’ என்கிறார்.

இதற்கு நெட்டிசன்ஸ், ‘லைப் லாங் முரட்டு சிங்கிளா?’ என கமெண்ட் போட்டு வருகின்றனர். இதற்கும் சில நெட்டிசன்ஸ், ’40 வயதாகும் திரிஷா பாணி போல’ எனவும் தெரிவித்துள்ளனர்.