ரஜினிக்காக முடிவை மாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்.. எஸ்.கே 23 படத்திற்கு முதலில் வைக்க இருந்த டைட்டில் என்ன தெரியுமா?
எஸ்கே 23 படத்திற்கு முதலில் வைக்க இருந்த டைட்டில் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே இது அர்ஜுன் பட டைட்டில் என அனைவருக்கும் தெரியும் ஆனால் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் இந்த டைட்டிலை கேட்டு வைத்துள்ளது படக்குழு.
அதே சமயம் முதலில் எஸ்.கே 23 படத்திற்கு ஹண்டர் என ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்க உள்ளதாக படக்குழு முடிவெடுத்திருந்ததாம் ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது ஹண்டர் என்ற ஆங்கில வார்த்தை வேட்டையன் என்ற தமிழ் அர்த்தத்தை தரக்கூடிய வார்த்தை என்பதால் அது ரஜினி சாருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து டைட்டிலை மாற்ற முடிவு செய்த போது தான் மதராசி என்ற டைட்டில் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
