
ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது – சிவகார்த்திகேயனுக்கு டுவீட் போட்ட கலெக்டர்
Sivakarthikeyan Reply to Tirupur Collector : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் 10 ஆயிரத்தை தாண்டி சென்று விட்டது.
அதேசமயம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்புவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இது குறித்து அம்மாவட்ட கலெக்டர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு சிவகார்த்திகேயன் தன்னுடைய வாழ்த்தையும் பதிலையும் தெரிவித்துள்ளார்.
அதாவது ஒரு தடவை மட்டும் ஜெயித்தா போதாது ஒவ்வொரு தடவையும் ஜெயிக்க வேண்டும். சிறந்த உழைப்பிற்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.