உங்களுக்கு எப்படி ஆக்ஷனிலும் காமெடி வருது என கேள்வி கேட்டதற்கு தளபதி விஜய் பதிலளித்துள்ளார்.
Thalapathy Vijay Conversation with Jayam Ravi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இன்று உச்ச நடிகராக இருந்து வருகிறார்.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் ஆனதை சன் டிவியுடன் கொண்டாடினார். இதற்காக அந்த சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சன் டிவி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை மீண்டும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது.
ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் அருண் விஜய் – செம ரொமான்டிக் புகைப்படம்.!
கிட்டத்தட்ட இருபது வருடமாக தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்து வருகிறீர்கள். உங்களுக்கு ஆக்ஷனிலும் சரி சாதாரணமாகவும் சரி எப்படி காமெடி வருகிறது யாரிடம் கற்றுக் கொண்டீர்கள் என கேட்டார்.
அதற்கு இதை நான் செந்தில் கவுண்டமணி பெரிய ரசிகன். அவர்களின் காமெடி அதிகம் பார்ப்பேன். என்னுடைய காரில் அவர் ஒரு காமெடி அடங்கிய ஒரு சிடி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
ரொம்ப டென்ஷனாக இருந்தால் அதைக் கேட்டால் தாமாக சிரிப்பு வந்துவிடும். அதெல்லாம் அப்படியே ஊறி விட்டது. என்னுடைய காமெடிக்கு என்னுடைய நண்பர்களும் இன்ஸ்பிரேஷன் எனக் கூறியுள்ளார்.