
சிக்ஸ் பேக் உடன் வேற லெவல் லுக்கில் சிவகார்த்திகேயனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி அதன் பிறகு தொகுப்பாளர், காமெடி நடிகர், ஹீரோ என படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் உட்பட அடுத்த அடுத்த படங்கள் வெளியாக உள்ளன.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தனது 21வது படத்திற்காக அவர் இப்படி ஒரு கெட்டப்பில் இருப்பதாக சொல்லி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.