முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளர் என படிப்படியாக வளர்ந்த இவர் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தினை ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஏ ஆர் முருகதாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.