‘அமரன்’ திரைப்படம் எப்படி இருக்கிறது?: ரசிகர்கள் விமர்சனம்

இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி, சிவகார்த்திகேயன் நடிப்பில் எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம், இன்று தீபாவளிக்கு நாளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படம் குறித்து பப்ளிக் ஒப்பீனியன் என்ன என பார்ப்போம் வாங்க..

உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

கதைக்களமாக எடுக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுதான் இத்திரைப்படம். அதாவது, வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆப்ரேஷனுக்கு தலைமை தாங்கினார். பொதுமக்களை பத்திரமாக மீட்கும் போராட்டத்தில் அவர் தனது உயிரினைத் தியாகம் செய்தார்.

ராணுவ மேஜரின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுத்ததால், இந்திய ராணுவத் தளவாடங்களுக்குச் சென்றே படப்பிடிப்பு நடத்தியது படக்குழு. படப்பிடிப்பின்போதே, ராணுவ வீரர்களின் பாராட்டினை படக்குழு பெற்றது.

அதேபோல், ராணுவ வீரர்களுக்கு என படக்குழு படம் ரிலீஸ்க்கு முன்னர் சிறப்பு திரையிடல் செய்தது. இதனைப் பார்த்த ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் படக்குழுவினரை பாராட்டினர்.

அதேபோல், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்ஹீஸ்-உம் கலந்து கொண்டார். அதேபோல், படக்குழுவினர் நடத்திய முதல் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வந்துள்ளது.

இதுவரையில் வயதானவர், நர்ஸ், போலீஸ் என்று பல கதாபாத்திரங்களில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக இராணு வீரராக தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து, சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பதிவில், ‘அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து கூறியிருக்கிறார். இப்போது, படத்தின் விமர்சனம் எப்படி வந்திருக்கிறது என்றால்..

தமிழ்நாட்டைத் தவிர மற்ற மொழிகளில் அதிகாலை 4 மணிக்கே வெளியான அமரன் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

முதல் பாதி பிளாக்பஸ்டர் ஹிட், பயர் என்றெல்லாம் ரசிகர்கள் எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படங்களில் அமரன் சூப்பர்ஹிட் படமாக திரையரங்களில் பிரகாசமாக ஜொலிக்கிறது.

அமரன் படத்தின் மந்தமான காட்சிகள் என்று எதுவும் இல்லை. அருமையான தருணங்கள் ஏராளமாக உள்ளன. நேர்த்தியான மற்றும் டுவிஸ்ட் கொடுக்கும் முதல் பாதி.

இடைவேளை வரையில், நேர்த்தியான மற்றும் வழக்கமான மசாலா காட்சிகள் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு காட்சியும் கதைக்களத்துடன் ஒப்புக் கொண்டது. ஆனால், ஒரு போதும் ரசிகர்களை சலிப்படைய வைக்கவில்லை.

அமரன் படத்தின் முதல் பாதி உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. சிவகார்த்தியின் பயணம் பவர்புல்லாக இருக்கிறது. சாய் பல்லவியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.

இடைவேளை காட்சி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இந்திய இராணுவத்தின் முகம். லவ்வர் பாயாகவும், ராணுவ வீரராகவும் ஜொலிக்கிறார்.

இடைவேளையில், பயங்கரவாதிகளை வீழ்த்திய பிறகு, “இது இராணுவத்தின் முகம்” என்று பயங்கரமான டயலாக் பேசுகிறார். அமரன் மிகவும் நல்லவர். சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதி சூப்பராக இருக்கிறது’ என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

எங்கெங்கும், தேசப்பற்றுடன் கூடிய தீபாவளி கொண்டாட்டம்.!

sivakarthikeyan in amaran movie twitter review
sivakarthikeyan in amaran movie twitter review