Pushpa 2

ஹிட் கொடுத்த அமரன்.. ஜிவி பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த கிப்ட்.. வைரலாகும் பதிவு..!

ஜிவி பிரகாஷிற்கு சிவகார்த்திகேயன் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Sivakarthikeyan Gift for Gv Prakash, Amaran Movie Success
Sivakarthikeyan Gift for Gv Prakash, Amaran Movie Success

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

உலக அளவில் இந்த திரைப்படம் 195 கோடியை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜிவி பிரகாஷிற்கு ஒரு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்துள்ளார். அதனை ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அமரன் படத்தின் வெற்றிக்காக இன்று பதிவிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு வெளியாகி வைரலாகி வருகிறது.