
என்னைக்கா இருந்தாலும் நான் தான் உங்க ஃபர்ஸ்ட் தயாரிப்பாளர் என பிரபலம் ஒருவரின் போட்டோவிற்கு கமெண்ட் அடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
Sivakarthikeyan Comment on Anirudh Photo : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிரூத். அஜித் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பேட்டை திரைப்படத்தின் மூலமாக முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தர்பார் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்து இருக்கிறார்.
மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இந்தியன்2 திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்.
இந்நிலையில் தற்போது அனிருத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
செம ஸ்டைலிஷ் ஆக இருக்கும் இந்த புகைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அது என்னைக்காக இருந்தாலும் நீங்க ஹீரோவா நடிக்கிற படத்துக்கு நான் தான் தயாரிப்பாளர் என கூறியுள்ளார்.
அனிருத் நாம் எப்போதும் ஹீரோவாக நடிக்க மாட்டேன். இசையமைப்பாளராக மட்டும் தான் இருப்பேன் என கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

