
அண்ணாமலை சீரியஸ் கண்டிஷனில் இருக்க மீனா காணாமல் போக முத்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலைக்கு திடீரென பஞ்ச் குறைந்து கொண்டே வர டாக்டர் இன்னும் நாலு மணி நேரத்திற்குள் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என அதிர்ச்சி கொடுக்க முத்து கையில் பணம் இல்லாமல் தவிக்க மனோஜிடம் கேட்க அவரும் என்னிடம் பணம் இல்லை என சொல்லி விடுகிறார்.

பிறகு விஜயா ரோகினியிடம் பணத்தைக் கேட்க ரோகினி அப்பா இப்போ துபாய்ல இல்லை, அவர்கிட்டயும் பணம் கேட்க முயற்சி செஞ்ச ஆனா முடியல என கூறுகிறார். பிறகு பார்லர் வச்சு ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்று சொல்ல ரோகினி அதுவும் இப்போதைக்கு முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு வீட்டு பத்திரத்தை வச்சு பணம் வாங்கலாம் என்று சொல்ல விஜயா வீட்ட வித்தா கூட பரவால்ல பணத்தோட வா என்று சொல்லி முத்துவை அனுப்ப முத்து வீட்டுக்கு வந்து வீடு முழுக்க தேடி பத்திரத்தை காணாமல் திரும்பி ஹாஸ்பிடல் வருகிறார். ஹாஸ்பிடல் வந்த முத்து மனோஜ் சட்டையை பிடித்து பத்திரத்தை நீதான் எடுத்திருப்ப என்று சண்டை போட ரோகிணி மீனா கிட்ட தானே பத்திரம் கொடுத்தாங்க போய் அங்க கேளுங்க என்று சொல்ல முத்து மீனாவை தேடி வீட்டிற்கு வர வீடு பூட்டி இருக்கிறது.

அதன் பிறகு கோவிலுக்கு வந்து பார்க்க அங்கிருந்து இப்பதான் மூணு பேரும் கிளம்பி போனாங்க என்று சொல்ல கூத்து எங்க போய் தொலைஞ்சாங்க என்று தெரியாமல் குழம்புகிறார். அதைத்தொடர்ந்து மீனா தன்னுடைய அம்மாவுடன் ஒரு சாமியார் பெண்மணியை பார்த்து தன்னுடைய மாமனாருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று சொல்லி வேண்டிக்கொண்டு மந்திர கயிறை வாங்கி வருகிறார். மேலும் அந்தப் பெண்மணி உன்னால நீ புகுந்த வீட்டுக்கு நல்லது மட்டும் தான் நடக்கும், உன் மாமனாருக்கு ஒன்னும் ஆகாது என சொல்லி அனுப்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.