மீனாவை ரோகிணி நக்கலாக பேச அப்பாவை மனோஜ் அசிங்கப்படுத்தி பேச முத்து சம்பவம் செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை சந்தித்த ரவி அண்ணியிடம் முதல்ல சண்டை போடுவதை நிறுத்து என்று அறிவுரை சொல்லி இன்னைக்கு மதியம் ஹோட்டலுக்கு சாப்பிட வாங்க என்று அழைப்பு கொடுக்கிறான். முதலில் முத்து வேண்டாம் டா சவாரி வரும் என்று சொல்ல ரவி நீ வரலைன்னா இதோட உன் கூட பேசவே மாட்டேன் என்று சொல்லி முத்துவை சம்மதிக்க வைக்கிறார்.

மறுபக்கம் மீனா துணி மடித்துக் கொண்டிருக்க முத்து ரெடியாகிக் கொண்டிருக்க முத்து என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க மீனா தோசை ஊத்திக்கிட்டு இருக்கேன் என்று நக்கல் அடிக்கிறார். உடனே முத்து என்ன என்று கேட்க பார்த்தா தெரியலையா என்று மீனா பதில் கொடுக்கிறார். சரி கிளம்பலாமா என்று சொல்ல மீனா எங்கே என்று கேட்க ரவி சொல்லலையா என திருப்பி கேட்கிறார்.

சொன்னாரு ஆனா அங்கே எதுக்கு நான் வரணும்? புருஷன் பொண்டாட்டி தானே வர சொல்லி இருக்காரு நாம என்ன புருஷன் பொண்டாட்டியா இங்க என்ன அப்படியா இருக்கோம்? நீ யாரோ நான் யாரோனு தானே இருக்கோம் என்று மீனா சொல்ல ஊர்ல எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க என்று முத்து சொல்ல ஊர்ல தானே சொல்றாங்க இங்க ஒன்னும் இல்லையே என்று மீனா திருப்பி பதில் கொடுக்கிறார். சரி புருஷன் சொல்றேன் ரெடி ஆகிட்டு வா என்று சொன்னதும் மீனா சந்தோஷப்பட பிறகு இதுல எந்த புடவை கட்டட்டும் என்று கேட்க முத்து ஒரு புடவையை தேர்வு செய்து கொடுக்கிறார்.

அடுத்து ஹோட்டலுக்கு முதலில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் வர ரவி அவர்களை வரவேற்று உட்கார வைக்கிறான். கொஞ்ச நேரத்தில் மீனாவும் முத்துவும் வர இருவரும் இவ்வளவு பெரிய ஹோட்டல்ல இதுவரைக்கும் நான் சாப்பிட்டதே இல்லை என்று சொல்லிக் கொள்கின்றனர்.

பிறகு இவர்களும் மேசை அருகே வர மனோஜ் நீங்க என்னடா இங்க உங்களுக்கு எல்லாம் ரோட்டு கடை ஓட்டல் தானே கரெக்டா இருக்கும் என்று ஏளனமாக பேச கொஞ்ச நாள் நீ அது கூட இல்லாம கோவில்ல சாப்பிட்டுகிட்டு இருந்த என்று பழைய விஷயத்தை கிளற மனோஜ் வாயை மூடி கொடுக்கிறார்.

இப்படியே மனோஜ் ரோகிணி பேசுவதற்கு எல்லாம் முத்து கவுண்ட்டர் போட பிறகு ரோகிணி மீனாவிடம் உங்க கல்யாணம் எப்படி நடந்தது லவ் மேரேஜ் தானே எங்க மீட் பண்ணீங்க என்று விசாரிக்க முத்து அதெல்லாம் கிடையாது முதல்ல மீனாவை இவனுக்குத்தான் பொண்ணு பார்த்தாங்க கடைசி நேரத்துல அப்பாவோட பென்ஷன் பணம் 27 லட்சத்தை தூக்கிட்டு ஓடி போயிட்டான்.

அப்பா என்கிட்ட கெஞ்சுனாரு நானும் சரின்னு சொல்லிட்டேன் அப்படித்தான் எங்க கல்யாணம் நடந்துச்சு என்று சொல்ல ஓ அப்போ உங்களுக்கு நடந்தது பரிதாப கல்யாணமா என்று ரோகினி சிரிக்க மனோஜ் நக்கலாக பார்த்து சிரிக்கிறார். பேப்பர்ல நிறைய படிச்சிருக்கேன் ஆனா நம்ம வீட்லயும் அப்படி ஒரு கல்யாணம் நடந்திருக்கு என்று சொல்கிறார்.

பிறகு எல்லாம் எங்க அப்பாவ சொல்லணும் அவருக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது முட்டாள் இந்த கிராமத்தில் எல்லாம் ஏதோ ஒன்னு சொல்லுவாங்க மாஞ்சா மடையன் என்று அசிங்கப்படுத்தி சொல்ல முத்து அப்பாவை பத்தி தப்பா பேசாத என்று வார்னிங் கொடுத்துக் கொண்டே இருக்க அப்படித்தான் பேசுவேன் என்று மனோஜ் ஓவராக பேச விரலை பிடித்து உடைத்து விடுகிறார்.

உடனே ரோகிணி இவர்களைப் பிடித்து திட்ட மீனாவும் மாமாவ பத்தி தப்பா பேசினா சும்மா இருப்பாங்களா என்று பதிலடி கொடுக்க மனோஜ் என் விரல் உடைஞ்சு போச்சு என்று நினைக்கிறேன் என்று சொன்னதும் ரோகிணி அவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார்.

வெளிய வந்த முத்து அப்பாவ பத்தி தப்பா பேசறான் இவனை நம்பி அப்பா மொத்த பணத்தையும் ஏமாந்துட்டு நிற்கிறார். 40 வருஷ உழைப்பை ஒரே நாள்ல ஒரு பொண்ணு கிட்ட போய் ஏமாந்து நிக்கிறான், அதனாலதான் அவன் கையை உடைத்தேன் அது தப்பா என்று மீனாவை பார்த்து கேட்க தப்பு கிடையாது பரிதாப கல்யாணம்னு சொல்லி சிரிக்கும் போதே அடிச்சிருக்கணும் என்று சொல்ல எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு தான் கொடுத்தேன் என்று முத்துக்கு கூறுகிறார்.

பிறகு வீட்டுக்கு போனதும் இன்னும் என்னெல்லாம் நடக்க போகுதோ அத்தை சும்மா இருப்பாங்களா என்று மீனா கேட்க எங்க அம்மாவோட மூஞ்சி திருஷ்டி பூசணிக்காய் மாதிரி ஆகிடும் என கவுண்ட்டர் போடுகிறார் முத்து.

அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த மனோஜ் செல்பி எடுப்பது போல் விரலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்க முத்து வாழைப்பழத்தை சாப்பிட்டு கொண்டிருக்க விஜயா ரவுடி பிள்ளையை பெத்து வச்சிருக்கீங்க என்று முத்துவை திட்டுகிறார். எப்படி குரங்கு மாதிரி உக்காந்துட்டு இருக்கான் பாருங்க என்று சொல்ல உங்க வயித்துல பொறந்தா உங்கள மாதிரி தான் இருக்கும் என்று பதிலுக்கு கலாய்த்து விடுகிறார் முத்து.

என் புள்ள வலியில் எப்படி துடித்தானோ, வலிக்குதா என மனோஜை பார்த்து கேட்க இப்போ கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்ல முத்து அப்போ சரியா உடைச்சு விடல போலயே என்று மேஜையை காலால் தள்ளிவிட ரோகினி ஸ்டாப் இட் என சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.