முத்து மீது நீங்கள் கோபமாக இருக்க என்ன காரணம் சிறுவயதில் நடந்தது என்ன?.. சிறகடிக்க ஆசை அனிலா பதில்..!
முத்து மீது நீங்கள் கோபமாக இருக்க காரணம் என்ன என்று அனிலாவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஹீரோவாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். அதே சீரியலில் அவரின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அனிலா.
இந்த சீரியலில் ஆரம்பம் முதலே மனோஜ் ஆசை மகனாகவும் முத்து மீது விஜயா வெறுப்பை காட்டுவது போலே இன்று வரை ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் இது குறித்து அனிலாவிடம் கேட்டுள்ளனர்.
நீங்கள் முத்துமீது கோபமாக இருப்பதற்கு காரணம் என்ன? அப்படி சிறுவயதில் என்னதான் நடந்தது என்று சுத்தமா எனக்கு தெரியாது உங்களுக்கு எப்ப தெரிய வருமோ எனக்கு அப்பதான் தெரிய வரும் என்று சொல்லி உள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
