காலில் அறுவை சிகிச்சை. ராதிகா சரத்குமார் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு.!!
காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக ராதிகா சரத்குமார் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் 80களில் ஃபேவரைட் நடிகையாக இருப்பவர் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் இன்று வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மகளிர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் ராதிகா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் இரண்டு மாதங்களாக கஷ்டப்பட்டு விட்டேன் இரண்டு படங்களில் வேலை செய்தேன். எனது முழங்காலில் அதீத வலி இருந்து கொண்டே இருந்தது வலி நிவாரணி மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டேன் ஆனால் அதற்கு அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என சொன்ன பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்று கூறி கணவருடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமில்லாமல் விரைவில் நலம் அடைந்து வீடு திரும்புவீர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram