மீனாவின் வண்டியை கண்டுபிடிக்கும் முத்து.. சிந்தாமணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

Web Ads

மீனாவின் வண்டியை முத்து கண்டுபிடித்துள்ளார்.

siragadikkaaasai serial today promo update 05-10-25
siragadikkaaasai serial today promo update 05-10-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி பற்றி மீனா தெரிந்து கொள்ளக் கூடாது என மீனாவிற்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என ரோகிணி முடிவு செய்து சிந்தாமணி மூலமாக அவரது அம்மாவின் கடையை தூக்கி விடுகிறார்.

ஏற்கனவே இந்த வருத்தத்தில் மீனா இருக்க விஜயா பேச்சு வாக்கில் அவளோட வண்டியை தூக்கி இருந்தா கூட அவ வேலை நின்றிருக்கும் என்று ஐடியாவை கொடுக்க சிந்தாமணி இதுவும் நல்ல ஐடியாவா இருக்கு என்று சொல்லி மீனாவின் வண்டியை தூக்கி விடுகிறார்.

Web Ad 2

இன்று வெளியான ப்ரோமோவில் மீனா சோகமாக வந்து வண்டி தொலைந்த விஷயத்தை முத்துவுடன் சொல்ல முத்துவும் ஒரு டூவீலர் மெக்கானிக் கடைக்கு சென்று அங்கு இருப்பவர்களை அடித்து வண்டி எங்கே என கேட்க அதில் ஒருவர் சிந்தாமணி அம்மா தூக்க சொன்ன வண்டியா என்று கேட்டு விடுகிறார்.

உடனே முத்து எதிரில் சிந்தாமணி வர காரை வேகமாக நிறுத்துகிறார்.முத்து சிந்தாமணியிடம் என்ன கேட்கிறார்? அதற்கு சிந்தாமணியும் பதில் என்னவாக இருக்கும்? என்பதை இனி வரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial today promo update 05-10-25
siragadikkaaasai serial today promo update 05-10-25