Pushpa 2

மீனாவிற்கு கிடைத்த ஆர்டர், சந்தோஷத்தில் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவிற்கு ஆர்டர் கிடைக்க சந்தோஷத்தில் உள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் விஜயா ஸ்விட்ச் போர்டில் கை வைக்க அவருக்கு ஷாக் அடிக்க அவரை தொடர்ந்து பார்வதி, மனோஜ், ரோகினி, ஸ்ருதி, ரவி என அனைவருக்கும் ஷாக் அடிக்க மீனா பூரிக்கட்டையால் விஜயாவை அடித்து கீழே விழ வைக்கிறார். பிறகு அனைவரும் எழுந்து உட்கார என்னாச்சு மீனா என்று முத்து கேட்கிறார். கையில ஷாக் அடிச்சிடுச்சு என்று விஜயா சொல்ல மெயின் ஆப் பண்ணி தானே இருந்தது யார் ஆன் பண்ணது என்று கேட்க மனோஜ் நான் தான் பண்ணேன் என்று சொல்லுகிறார். பிறகு பார்வதி பேச உன் மேல இருக்குற கோவம் இன்னும் குறையல என்று சொல்லுகிறார். உடனே மனோஜிடம் செய்வினை வச்சா கூட இப்படித்தான் நடக்கும் அவளை பரிகாரம் செய்ய சொல்லு நான் அப்புறம் பேசுகிறேன் என்று கிளம்பி விடுகிறார் மனோஜ் விஜயாவிடம் கேட்க விஜயாவும் வேறு வழி இல்லாமல் பரிகாரம் செய்ய ஒத்துக்கொள்கிறார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 30-11-24
SiragadikkaAasai Serial Today Episode Update 30-11-24

மீனா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஒரு போன் வருகிறது அதில் மண்டபத்தில் இருந்து பேசுவதாகவும் நீங்க கேட்ட மாதிரி ஒரு சின்ன ஆர்டர் வந்து இருக்கு என்று வர சொல்லுகின்றனர் அங்கு சென்ற மீனா பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்து இந்த ஆர்டரை நீங்க நல்லா பண்ணீங்கன்னா அடுத்தாடர் உங்களுக்கே கொடுக்கிறோம் என்று சொல்ல மீனா சந்தோஷமாக வீட்டுக்கு வருகிறார். ஸ்வீட் உடன் வந்த மீனா முதலில் அண்ணாமலைக்கு விஷயத்தை சொல்லி ஸ்வீட் கொடுக்க அவரும் வாழ்த்துகிறார். பிறகு விஜயாவிற்கு ஸ்வீட் கொடுக்க இதெல்லாம் ஒரு வேலையா என்று வழக்கம்போல் மீனாவை தாழ்த்தி பேசுகிறார்.

ரோகிணியும் மனோஜும் வர மீனா அவர்களுக்கு ஸ்வீட் கொடுக்கிறார். உடனே முத்து வர முத்துவிற்கு விஷயத்தை சொல்ல அவர் மிகவும் சந்தோஷப்படுகிறார் உடனே நான் போய் மாலை வாங்கிட்டு வரேன் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாங்க என்று தடுத்த நிறுத்த ரவியும் சுருதியும் வர அவர்களிடம் விஷயத்தை சொல்ல ரவி வாழ்த்து சொல்லுகிறார். ஸ்ருதியும் வாழ்த்து சொல்லி ஸ்வீட் எடுத்துக் கொள்கிறார். உடனே மீனா அப்பா மீனா தொழிலதிபராக போற என்று சொல்ல ரூமுக்குள் இருந்து வெளியே வந்த மனோஜ் பூ கட்டுறவங்க எல்லாம் தொழிலதிபராக முடியாது அதுக்குன்னு படிப்பும் அறிவும் வேணும் என்று சொல்ல படிப்பு அறிவு இருந்தா மட்டும் தான் தொழிலதிபராக முடியுமா நேர்மையா சம்பாதிச்சா யாரு வேணா தொழிலதிபராக்கலாம் என்று சொல்லுகின்ற. உடனே முத்து இன்னைக்கு எல்லாருக்கும் பிரியாணி ட்ரீட் கொடுக்கலாம் என்று சொல்ல உடனே மீனா அட்வான்ஸ் கொடுத்த பத்தாயிரத்து எடுத்துக் கொண்டு வந்து முத்துவிடம் கொடுக்க விஜயா மனோஜ் ரோகினி மூவரும் வாயை பிளக்கின்றனர். விஜயா எனக்கும் மனோஜுக்கும் செய்ய வேண்டாம் என்று சொல்ல ஏன் என்று கேட்கிறார்கள் நாங்கள் விரதம் இருக்கிறோம் என்று சொன்னவுடன் மனோஜ் என்னமா இன்னைக்குன்னு பார்த்து பிரியாணி செய்றாங்க என்று சொன்ன நானே பிரியாணி சாப்பிட முடியாத நான் டென்ஷன்ல இருக்கேன் பரிகாரம் சொல்லி வந்துட்டா என்று டென்ஷன் ஆகிய உள்ளே சென்று விடுகிறார் விஜயா.

மறுபக்கம் மீனா பூ கட்டும் ஒருவரை பார்த்து பிரியாணி செய்வது பற்றி பேச நான் ஊருக்கு போக வேண்டியது இருக்கும் நான் உனக்கு எப்படி செய்யணும் என்று சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார் அது மட்டும் இல்லாம கறி எங்க வாங்க போற என்று கேட்க எங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற கடையில் இன்று மீனா சொல்லுகிறார். அங்க வேணா நான் வழக்கமா வாங்குற கடையில சொல்றேன் நீ அங்க வாங்கிக்கோ அவர் எனக்கு நான் நல்லா போடுவாரு என்று சொல்லி அழைத்துச் செல்கிறார் அது ரோகினியின் மாமாவாக நடித்த கறிக்கடைக்காரரின் கடையாக இருக்கிறது.

மீனா கறிக்கடைக்காரரை கண்டுபிடிப்பாரா?இல்லை கறிக்கடைக்காரர் தப்பிப்பாரா?என்ன நடக்கப் போகிறது? என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 30-11-24
SiragadikkaAasai Serial Today Episode Update 30-11-24