மினிஸ்டர் சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி காப்பாற்றப்படுவாரா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு உதவி செய்த திருநங்கைகள் மூவரும் போலீஸ் ஸ்டேஷனில் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து போலீஸ் மற்றும் சுந்தரி வல்லி குடும்பத்தினர் அனைவரும் வருகின்றனர். இன்ஸ்பெக்டரிடம் அவர்கள் பேசப் போக அவர்களை வெயிட் பண்ண சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். அருணாச்சலம் சூர்யாவிடம் பேச போக சுந்தரவல்லி வேண்டாம் என தடுத்து அழைத்து வந்து விடுகிறார். பிறகு மாதவி சூர்யாவிடம் நீ பண்றது ரொம்ப தப்பு சூர்யா இருந்தாலும் அவங்க நம்மளோட அம்மா இது வெளியே தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம் வேண்டாம் என்று சொல்ல சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
சுரேகாவும் வேண்டாம்னா எதுவா இருந்தாலும் நம்ம பேசி தீத்துக்கலாம் போலீஸ் ஸ்டேஷன் கேஸ் எல்லாம் எதுக்கு என்று சொன்ன சூர்யா அமைதியாக கிளம்ப நான் இவ்வளவு சொல்லியும் அமைதியா போனா என்ன அர்த்தம் என்று கேட்கிறார் மாதவி. அப்படினா கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்னு அர்த்தம் என்று சூர்யா சொல்லிவிட்டு கிளம்புகிறார் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சென்றதும் சிங்காரம் சூர்யாவை தடுத்து நிறுத்தி எனக்கு என்னமோ அம்மா இது பண்ணி இருக்க மாட்டாங்கன்னு தான் தோணுது, என் பொண்ணு எப்படி இருக்காளா இல்லையா என்று கூட எனக்கு தெரியாது ஆனால் ஒரு தகப்பனா எனக்கு எல்லா கஷ்டத்தையும் ஓரம் கட்டிட்டு தான் நான் சொல்றேன் அம்மா மேல எந்த தப்பும் இருக்காது என்று சொல்லியும் உங்களைவிட அவங்கள எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறது உறுதி என்று சொல்லி உள்ளே செல்கிறார். உடனே சூர்யா கம்ப்ளைன்ட் கொடுக்க அருணாச்சலம் நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல சூர்யா என்று சொல்ல சுந்தரவல்லி நீங்க எதுக்கு அவங்க கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க என்ன நடக்கணுமோ நடக்கட்டும் விடுங்க என்று சொல்ல சூர்யா கம்ப்ளைன்ட் கொடுக்க உட்காருகிறார்.
திருநங்கைகள் மூவரும் ஓரமாக நிற்க சொன்னார்கள் என்று சொல்லி சுந்தரவள்ளியின் கார் பக்கத்தில் வருகின்றன. அங்கு இருக்கும் கான்ஸ்டபிள் அவர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்க அதைக் குடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். நந்தினி இவர்களின் குரலை கேட்டு அவர்கள் காசு கொடுத்தது ஞாபகம் வந்து வண்டியை தட்டுகிறார். அவர்கள் இதுக்குள்ள யாரோ இருக்காங்க என்று பேசிக்கொள்ள உடனே அவர்கள் கூத்தாண்டவர் புகைப்படம் கொடுத்ததை நந்தினி டிக்கியின் வெளியில் போடுகிறார். இதனால் உள்ளே ஆள் இருப்பதை உறுதி செய்து அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் ஓடி காருக்குள்ள யாரோ இருக்காங்க என்று சொல்லி கூப்பிடுகின்றனர்.
உடனே அனைவரும் ஓடி வந்து பார்க்க அருணாச்சலம் கார் டிக்கியை திறக்கிறார். அதில் நந்தினி இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அவருக்கு தண்ணீர் கொடுத்து முகத்தில் தெளிக்க நந்தினி மயக்கத்தில் இருக்கிறார் உடனே போலீஸ் இடம் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ண சொல்லுகின்றனர். அருணாச்சலத்திடம் போதுமா டாடி இப்பயாவது நம்புறீங்களா நான் சொன்னதை என்று கேட்க எதுவும் தெரியாமல் பேசாத சூர்யா என்று சொல்லுகிறார். என்ன நடந்ததுன்னு தெரியாம எப்படி நீ சுந்தரவல்லி மேல பழிய சொல்றேன் என்று சொல்ல எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நின்னுகிட்டு இருக்காங்க பாருங்க என்று கோபப்படுகிறார். உடனே ஆம்புலன்ஸ் வர நந்தினி அதில் ஏற்றிவிட்டு சிங்காரம் கூடவே செல்கிறார். நந்தினியை ஹாஸ்பிடலில் டாக்டர் செக் செய்துவிட்டு இரண்டு நாளாக சாப்பிடாம இருந்திருக்காங்க ஒன்னும் பயப்படறதுக்கு இல்ல டிரிப்ஸ் போட்டா சரியாயிடும் என்று சொல்ல சிங்காரம் இது போதும் கருப்பா என்று சந்தோஷப்படுகிறார்.
மறுபக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் சூர்யாவிடம் நந்தினி கண்ணு முழிச்சதுக்கு அப்புறம் எப்படி வந்தா என்னன்னு தெரிஞ்சுகிட்டு அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்ல இப்ப கூட நீங்க நம்ப மாட்டீங்களா யாரோட கார்ல இருந்தாங்க அவங்களோட கார்ல தான் நந்தினி இருந்தா அப்பயும் அவங்க தப்பு செய்யலன்னு சொல்ல போறீங்களா டாடி என்று சொல்ல யோசிக்க முடிவு எடு சூர்யா என்றும் சொல்கிறார். ஆனால் யார் சொல்வதையும் சூர்யா கேட்காமல் கம்ப்ளைன்ட் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் கேஸ் வாபஸ் வாங்க போறியா? இல்லையா? என்று கேட்கிறார். கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க முடியாது என்று சூர்யா சொல்ல மினிஸ்டர் இன்ஸ்பெக்டர் இடம் அந்த பொண்ணு வந்து சொல்றதுக்குள்ள சுந்தரவல்லி மேல கேஸ் போட்டு உள்ள தள்ளு என்று சொல்லுகிறார்.
உடனே இன்ஸ்பெக்டர் சுந்தரவல்லி இடம் கையெழுத்து போடுங்க என்று சொல்ல சுந்தரவல்லி போடப் போகும்போது ஒரு நிமிஷம் என்று குரல் வருகிறது. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.