ஓவராக பேசிய மனோஜ், கைது செய்த போலீஸ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜ் ஓவராக பேச,அவரை போலீஸ் கைது செய்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி மீனா விடம் விஜயா உன்னை எவ்வளவு மட்டம் தட்டி பேசினாலும் அதுக்காக தான் இப்ப கடவுள் தண்டனை கொடுத்து இருக்காரு என்று சொல்ல,அப்படியெல்லாம் நான் நினைக்கல என்று அவர்கள் வீட்டுக்கு வர சொல்லுங்க என்று சொல்லுகிறார் நானும் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் சரி நான் பேசி பார்க்கிறேன் என போனை வைக்கிறார் உடனே முத்து மீனாவிடம் யார் பேசியது என்று கேட்க பார்வதி ஆன்ட்டிதான் என்று சொல்லுகிறார் அம்மா அங்க தான் இருக்காங்களா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார். நீங்க மாமா கிட்ட பேசி பார்த்தீங்களா என்று சொல்ல அவளை தானே போனா அவளே வரட்டும்னு சொல்றாரு, மீனா உங்க அண்ணா ரோகினிய பார்த்து பேசி இருப்பாரா என்று கேட்க அவனே பீஸ் போன பல்பு மாதிரி இருக்கா எது சொன்னாலும் அமைதியாகவே இருக்கான் அம்மா சொல்லாம வேற எதுவும் செய்ய மாட்டான் என்று சொல்லிவிடுகிறார்.
இதுக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் ஒரு ஆள் இருக்காங்க என்று சொல்லி பாட்டியை கூட்டி வருவதாக சொல்லுகிறார் ஆனால் மீனா பாட்டி வந்தா பிரச்சனை தீரும்தான் ஆனால் மாமா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யுங்க அப்புறம் பாட்டியோட மனசு கஷ்டப்படணும் மாமா நினைக்க கூடாது இல்ல என்று சொன்னால் நீ சொல்றது சரிதான் நான் கேட்கிறேன் என்று சொல்கிறார். மறுபக்கம் மனோஜ் நண்பர் வண்டியில் மனோஜை கூட்டிக் கொண்டு வர வண்டியை ஆட்டி ஆட்டி ஓட்டி வருகின்றனர்.
அவர் மனோஜிடம் ஆட்டாம அமைதியா உட்காரு என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் டிராபிக் போலீஸ் இடம் மாட்டுகின்றனர் அங்கே அருண் இருக்கிறார். முதலில் வேறொரு போலீஸ் வந்து மனோஜ் நண்பர் வாயில் மெஷின் வைத்து செக் பண்ண அவர் குடிக்கவில்லை என தெரிந்தவுடன் போக சொல்லுகின்றனர் ஆனால் மனோஜ் குடித்தது நான் என் பிரண்டு வாயில வச்சு செக் பண்றீங்களா மன்னிப்பு கேளுங்க என் பொண்டாட்டி பொய் சொல்லிட்டா அதனால நான் குடிச்சேன் என் பிரண்டு கிட்ட மன்னிப்பு கேளுங்க என்று அராஜகம் செய்ய அருண் பார்த்துவிட்டு வருகிறார். என்ன பிரச்சனை என்று கேட்க இந்தப் போலீஸ் என் பிரண்டு கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று சொன்ன அவரும் முதலில் கூட்டிட்டு போகுமாறு தான் சொல்லுகிறார் ஆனால் மனோஜ் ஓவராக அலம்பல் செய்ய அரெஸ்ட் பண்ணி அழைத்து சென்று விடுகின்றன.
ரோகினி படுத்துக் கொண்டிருக்க வித்யா சாப்பாடு கொடுக்கிறார். அப்படியே சாப்பிடாம இருந்து உடம்புக்கு கெ mடுத்துக்க போறியா என்று சொல்ல இல்லை நான் கண்டிப்பா போராடி என் வாழ்க்கை வாழ்வேன் என்று சொல்லுகிறார் அதற்கு சாப்பிட வேண்டும் சாப்பிட்டதா தெம்பா ஓட முடியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.மனோஜ் போன் பண்ணவில்லை என்று கேட்கிறார். சரி நீ பண்ணு என்று சொல்ல நான் பண்ண மாட்டேன் அவனே பண்ணட்டும் என்று சொல்லுகிறார். அதற்கு வித்யா நீ பண்ணதுக்கு வேற ஒரு ஆளிருந்தால் தூக்கி போட்டு மிதிச்சிருப்பாங்க மனோஜ் என்பதால் தான் அமைதியா இருக்காரு என்று சொல்லுகிறார். மனோஜனா உண்மையா லவ் பண்றேன் யாருக்காகவும் மனோஜ் எதுக்காகவும் மிஸ் பண்ண மாட்டேன் என்று சொல்லுகிறார்.
போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ் சாரி கேக்கணும் என் பொண்டாட்டி பொய் சொல்லிட்டா என்று மாறி மாறி இதையே சொல்லிக் கொண்டிருக்க அருண் டென்ஷன் ஆகி இதையேதான் பேசிக்கிட்டு இருப்பியா பார்த்தா டிசெண்டா இருக்கா இது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று கூப்பிடு ஒரு கட்டத்திற்கு மேல் சட்டையை கழட்டி உட்கார வைக்கின்ற. உடனே மனோஜ் நண்பர் வீட்டுக்கு வந்து முத்துவிடம் உண்மையை சொல்ல என்ன நடக்க போகிறது? முத்து என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
