முத்து எடுத்த முடிவு, மனோஜை பயத்தில் நடுங்க விட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சீதா விஷயத்தில் முத்து உறுதியாக இருக்க, மனோஜ் பயத்தில் நடுங்கி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் அவரது நண்பர் இருவரும் சாப்பிட போகலாம் என்று முடிவெடுக்க அந்த நேரம் பார்த்து ரோகினி மனோஜ்காக சாப்பாடு ஆர்டர் செய்திருப்பது வருகிறது உடனே எனக்கு ரொம்ப பசியா இருக்கு நான் சாப்பிட போறேன் என்று வர இருவரும் வந்து உட்காருகின்றனர் அவரது நண்பருக்கு கொஞ்சமாக கொடுக்க இதை நீயே சாப்பிடுவது என்று சொல்ல எனக்கு ரொம்ப பசிக்குது நான் சாப்பிட போறேன் என்று சொல்லி மனோஜ் வேகவேகமாக சாப்பிட மனோஜ் ஃப்ரெண்ட் உன் மேல இவ்வளவு பாசம் இருந்தாலும் உன் பொண்டாட்டி சாப்பாடு அனுப்பி இருக்கோம் நீ பேச மாட்டேங்கற என்று கேட்க அம்மா பேச கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார்.
இப்படியே பேசாம இருந்தா என்ன நடக்கும் தெரியுமா உன் மனசு கஷ்டப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று சொல்ல என்ன நடக்கும் என்று கேட்க இதே மாதிரி தான் என் பிரண்டு ஒருத்தன் புருஷன் பொண்டாட்டி சண்டை வந்துட்டே இருந்தது அவன் பேசாமயே இருந்தா அந்த பொண்ணு வந்து வந்து ரொம்ப கன்வென்ஸ் பண்ணுச்சு ஆனா இவன் ஓவரா பில்ட் பண்ணி இருந்ததுனால ஒரு கட்டத்துக்கு மேல வெளியே ஒரு கனெக்ஷன் ஆகி லெட்டர் எழுதி வைத்துவிட்டு அவன் கூட போயிடுச்சு என்று சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைந்து எனக்கு பசி போயிடுச்சு நீயே சாப்பிடு என்று சொல்லுகிறார் என்னோட ரோகிணி அப்படி பண்ண மாட்டா என்று சொல்ல அப்படி எல்லாம் சொல்லிட முடியாது என்று சொல்ல மனோஜ் யோசிக்கிறார்.
மறுபக்கம் மீனா வீட்டில் இருக்க முத்து வந்தவுடன் எதுக்கு எங்க வீட்டுக்கு போய் பேசினீங்க என்று கேட்க உங்க வீடா நீங்கதான் எங்க வீட்டுக்கு அப்பா மாதிரி மூத்த புள்ள எல்லாம் சொல்லுவீங்க எல்லாம் வாய் வார்த்தைக்கு தான் நான் இப்படி பேசுறேன் என்று கேட்க நான் அதுக்கு சொல்லலைங்க என்கிட்ட பேசிட்டு முடிவு எடுத்துட்டு போய் நம்ம பேசி இருக்கலாம் என்று சொல்ல அந்த மாதிரி எல்லாம் எனக்கு யோசிக்க தெரியாது என்று சொல்லுகிறார். இதுல ரெண்டு ஜாதகம் இருக்கு ஒருத்தன் ஐடி கம்பெனி ஒருத்தன் பேக்ல வேலை செய்றான். நான் ஒன்னும் டிரைவர் மாப்பிள்ளையா பார்க்க மாட்டேன் என்று சொல்ல நான்டிரைவரை கல்யாணம் பண்ணி சந்தோஷமா தான் வாழறேன் என்று மீனா சொல்ல இப்போ அது பிரச்சனை இல்ல அவ மனசுல ஒருத்தரை நினைச்சுகிட்டு இருக்கும்போது வேற ஒருத்தரை எப்படி கல்யாணம் பண்ணி வைக்க முடியும் என்று கேட்கிறார்.
நீ என்ன என்ன புடிச்சா கல்யாணம் பண்ண என்று கேட்க என் மனசுல நான் வேற யாரையும் நினைக்கல ஆனா அவ நினைச்சுகிட்டு இருக்கும்போது எப்படி செய்ய முடியும் என்று சொன்னால் முத்து கோபப்படுகிறார். அவன தான் கல்யாணம் பண்ணி வைப்பீங்கண்ணா இனிமே நான் எதுக்குமே வரமாட்டேன் நீயும் போகக்கூடாது என்று முடிவை சொல்லிவிட்டு கோபமாக சென்று விட மறுபக்கம் அருண் சீதாவுக்கு போன் போட ரூமில் சீதா அழுது கொண்டிருக்க ஹாலில் சந்திரா பூக்கட்டிக் கொண்டிருக்கிறார். மூன்று முறை போன் பண்ணியும் சீதா கட் பண்ணிக் கொண்டே இருக்க பிறகு கதவை சாத்திவிட்டு அழுகிறார். மறுபக்கம் ஸ்ருதிக்கு ஒருவர் போன் போட்டு ரெஸ்டாரன்ட் திநகர்ல இருப்பதாக சொல்லுகிறார் உடனே சந்தோஷப்பட்டு நாளைக்கு நான் வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு ரவி இடம் விஷயத்தை சொல்ல எதுக்கு நீ ஏன் அவசரப்பட்டு எல்லாத்தையும் முடிவு பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார் நான் அவசரல்லா படல நம்ப ஒரு விஷயம் செய்றோம் அதை செஞ்சுடனும் என்று சொல்லுகிறார். ஒரு வழியாக பேசி ரவியை வர சம்மதிக்க வைக்கிறார்.
மனோஜ் ரூமை திறந்து உள்ளே வர பெட் மீது லெட்டர் எடுப்பதை பார்த்து பதறி அடித்து வந்து படிக்க அதில் மனோஜ் நான் போறேன் எப்ப வருவேன்னு தெரியாது என தேடாத என்று எழுதி இருக்க உடனே மனோஜ் என்ன அந்த ப்ரோ சொன்ன மாதிரி எழுதி வச்சுட்டு போயிட்டாலும் நான் இது யார்கிட்ட சொல்லுவேன் என ரூமில் பதறி கொண்டு இருக்க பாத்ரூமில் இருந்த ரோகினி வருகிறார் எதற்கு இது மாதிரி லெட்டர் எழுதி இருக்க என்று கேட்க எனக்கு ஒரு கிளையண்ட் ஆர்டர் வந்தது நீ போன் பண்ணா எடுக்கல அதனால லெட்டர் எழுதி வைத்துவிட்டு போலாம்னு எழுதி வச்சேன் ஆனா அவங்க நாளைக்கு வர சொல்லிட்டாங்க என்று சொல்லுகிறார். அதற்கு மனோஜ் என்ன சொல்லுகிறார்? ரோகிணியின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
