முத்துவிற்கு வந்த சந்தேகம், உச்சகட்ட சந்தோஷத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
முத்துவிற்கு சந்தேகம் வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பூ கட்டிக் கொண்டிருக்க முத்து வருகிறார் .கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு இன்னைக்கு ஆர்டர் வாங்க போன இடத்துல சிந்தாமணின்னு ஒருத்தவங்க இருந்தாங்க அவங்க பிரச்சனை பண்ற மாதிரி பேசுறாங்க என்று சொல்ல தொழில் வந்துட்டாலே அப்படித்தான் இருக்கும் நீ பூ கட்டிட்டு வா என்று சொல்லிவிட்டு முத்து சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் அனைவரும் புது வீட்டிற்கு வந்து பார்க்க விஜயா வீட்டை பார்த்து துள்ளி குதிக்கிறார். சூப்பரா இருக்கு அழகா இருக்கு என்று சந்தோஷப்படுகிறார். பிறகு அனைவரும் உள்ளே செல்ல வீட்டு ஓனராக இருந்த இருவரும் அக்ரிமெண்டில் கையெழுத்து போடுங்க என்று சொல்லி கையெழுத்து வாங்கிக் கொள்ள, மனோஜ் பணத்தை எடுத்து அடுக்கி வைக்கிறார். மனோஜ் ஏற்கனவே கோவில் அஞ்சு லட்ச கொடுத்து இருக்கேன் இதுல 25 லட்சம் இருக்கு என்று சொல்ல இன்னும் ஆறு மாசம் டைம் இருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துடுங்க என்று சொல்லி பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகின்றனர். இவர்கள் வெளியே காரில் வேகவேகமாக வர எதிரில் முத்துவின் கார் வருகிறது. கார் மோதும் படி வந்து நிற்க முத்து இறங்கி டிரைவரிடம் சண்டை போடுகிறார். சத்தம் கேட்டு வெளியே வந்த குடும்பத்தினர் என்னம்மா என்னோட ஓனர் கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்ககான் என்று மனோஜ் வருகிறார். அதற்குள் வந்த நபர் கார் டிரைவரை சமாதானப்படுத்தி வேக வேகமாக கிளம்பி விடுகிறார். பிறகு முத்துவிடம் நான் இவர்கிட்ட தான் வீடு வாங்கி இருக்கேன் இவர்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்க என்று வந்து திட்டுகிறார். ஓனர் நா எதுக்கு வாடகை கார்ல போகணும் என்று கேட்க அவர் டைரக்ட்டா ஃபிளைட்டுக்கு போறாரு அதனால கார் புக் பண்ணி இருப்பாரு என்ற ரோகினி சொல்லுகிறார்.
பிறகு அனைவரும் வீட்டை சுத்தி பார்க்க ரவி, ஸ்ருதி, மீனா இருவரும் பீச்சில் இருக்கின்றனர். விஜயா வீட்டை சுத்திப் பார்த்து வந்துவிட்டு அண்ணாமலை இடம் எவ்வளவு பெருசா இருக்குங்க நம்மளோட கீழ இருக்குற வீடும் மேல இருக்குற வீடும் சேத்தா கூட இவ்வளவு பெருசு வராது என்று பெருமையாக சொல்லுகிறார் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லுவாங்க மனோஜ்க்கு ஏத்த மாதிரி ரோகினி அமைச்சு கொடுத்திருக்காரு. மனோஜ் இவ்வளவு வளர்ந்து இருக்கானா அதுக்கு ரோகிணி தான் முக்கிய காரணம் என்று சொல்ல உடனே முத்து அம்மா சொல்றது கரெக்டு தான் பா. மனைவி அமைவதனால தான் அது மாதிரி உனக்கு அமையாம இவங்கள மாதிரி வந்ததால் தான் நீ இவ்ளோ பெரிய வீட்ல வாங்கல என்று சொல்ல விஜயா கோபப்படுகிறார்.
பிறகு ஸ்விம்மிங் ஃபுல் வந்து அனைவரும் பார்க்க ஸ்ருதியிடம் விஜயா எவ்ளோ பெரிய வீடு பரிசு சூப்பரா இருக்குல்ல என்று சொல்ல, உடனே சுருதி இந்த வீடு நல்லாதான் இருக்கு இன்னும் கொஞ்சம் தள்ளி போனா இதோட பெரிய வீடெல்லாம் இருக்கு எங்களோட பீச் ஹவுஸும் இங்கதான் இருக்கு என்று சொல்லுகிறார் உங்களுக்கும் இருக்கா என்று விஜயா வாயை பிளக்க இது மட்டும் இல்லாம எங்க டாடி போட் ஹவுஸ் வைத்திருக்கிறார் என்று சொல்லுகிறார். பார்ட்னர்ஷிப்ல வச்சிருக்கார் என்று சொல்ல தனியா இல்லல்ல என்று விஜயா கேட்ட எங்க டாடி தனியாக யாட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்லுகிறார். உடனே அப்படினா என்ன என்று விஜயா கேட்க போட்டோ விட பெருசு கப்பலை விட சிறுசு என்று சொல்லிவிட்டு போக விஜயா பல்பு வாங்குகிறார்.
உடனே மனோஜிடம் நீ வீட்டு முன்னாடி ஒரு கப்பல வாங்கி நிறுத்துடா என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றன. அண்ணாமலை விஜயாவை அழைத்துச் சென்றுவிட எல்லோரும் உள்ளே வருகின்றனர். விஜயா இவ்வளவு பெரிய வீடா இருக்கே இப்படி மா கூட்டிப் பெருக்கிறது என்று கேட்க அதற்கு ரோகினி நம்ம வேற வர வரைக்கும் ஷூட்டிங்க்கு கூட வீடு விடலாம் நம்ம ஒரு போஷன்ல இருக்கலாம் என்றும் சொல்லுகிறார்.
விஜயா என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகினியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.