குடும்பத்தாருக்கு தெரிந்த மனோஜின் திருட்டுத்தனம், முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
முத்துவின் திருட்டுத்தனம் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து முதலில் நடிக்க மறுத்து வேலையெல்லாம் விட்டுட்டு வருவதனால் காசு கொடுக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.ஆனால் மனோஜ் நம்ம கடைக்கு நடிக்க எதுக்கு காசு என்று கேட்க நம்ம கடையா, உன் கடை என்று சொல்லுகிறார் முத்து. நான் வரல என்று சொல்ல, பிறகு நானும் முத்து வரமாட்டான்னு தான் சொன்னேன் ஆனா சந்தோஷி சார் தான் வந்தே ஆகணும்னு சொல்லி இருக்காரு என்று சொல்ல அப்படியா அவ்வளவு பெரிய மனுஷனே என்னை மதித்து கூப்பிட்டு இருக்கும்போது நான் எப்படி போகாம இருக்க முடியும் அதுவும் இல்லாம அவரு கண்ணதாசன் ஃபேன் வேற கண்டிப்பா நான் வருவேன் என்று சொல்லி சம்மதிக்கிறார். பிறகு மீனா வராமல் இருக்க மீனாவையும் சம்மதிக்க வைத்த முத்து அனைவரும் சீக்கிரமாக காலைல ரெடியாயிடுங்க என்று ரோகினி சொல்லிவிட அனைவரும் ரூமுக்கு கிளம்புகின்றனர்.
மனோஜ் மட்டும் தனியாக விஜயா ரூமுக்கு சென்று பத்தாயிரம் ரூபாய் கொடுக்கிறார். மறுநாள் காலையில் ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. அண்ணாமலையும் விஜயாவும் ஓனராகவும், பணக்காரர்களாக ரோகிணியும் மனோஜும், மிடில் கிளாஸ் ஃபேமிலியாக ரவி மற்றும் சுருதி, பிறகு ஏழை குடும்பமாக முத்து மற்றும் மீனா நடிக்க சொல்லுகின்றனர்.
முதலில் ரோகினையும், மனோஜியும் ,வர அவர்களை அண்ணாமலையும் விஜயாவும் வரவேற்க சொல்லுகின்றனர். ஆனால் அண்ணாமலை சரியாக செய்யாததால் டைரக்டர் அவரை கத்தி பேச முத்து எதுக்கு இப்போ குரல ஒசத்தி பேசுறீங்க அவர் ஒரு டைரக்டர் தான் என்று சொல்ல நீங்க டைரக்டரா சார் என்று கேட்க ஆமா எங்க வீட்ல இந்த கோட்டு போட்ட மனோஜ் எப்படிப்பட்டவர் தெரியுமா அவனையும் எங்க அம்மாவையும் டைரக்ட் பண்றாரு என்று சொல்ல அங்கு இருப்பவர்கள் சிரிக்கின்றனர். நீங்க ஓரமா போங்க சார் உங்க டயலாக் வரும்போது கூப்பிடுறேன் என்று சொல்லுகிறார். பல டேக்குகளுக்குப் பிறகு ரோகினி மனோஜ் சீன் ஓகே ஆகிறது. பிறகு சுருதியும், ரவியும் வர உடனே டைரக்டர் கட் செய்து நீங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி கடையே வாங்குற மாதிரி வரக்கூடாது விலை எப்படி இருக்குமோ என்று பயந்துகிட்டு வரணும் என்று சொல்லுகிறார்.
பிறகு அவர்கள் வந்து வாஷிங் மெஷின் கேட்கின்றனர். கம்மியான விலையில் ஆஃபர்ல இருக்கு என்று சொல்லுகின்றன பிறகு முத்துவும், மீனாவும் வந்து பொருள் வாங்க வருகின்றனர் பிறகு இந்த டேக் முடிந்து அண்ணாமலையையும் விஜயாவையும் பில்லிங் போடுற இடத்துக்கு போக சொல்லுகின்றனர். பிறகு இவர்கள் மூவரும் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு எல்லோருக்கும் எல்லா விதமான வகையிலும் பொருள்கள் இங்கு கிடைக்கும் என்று நினைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்களை வர சொல்லுகிறார்.
அனைவரும் ஒன்றாக வர டைரக்டர் எதுக்கு இப்படி உயிரை வாங்குறீங்க என்றெல்லாம் திட்ட கோபப்பட்ட முத்து என்னங்க ஓவரா பேசுறீங்க ஓசில வேலை வாங்கிட்டு இப்படி எல்லாம் திட்டுவீங்களா பொறுமையா சொல்லிக் கொடுக்க மாட்டீங்களா என்று கேட்க ஓசிலையா சந்தோஷி சார் ஒரு ஆளுக்கு 25 ஆயிரம் ரூபா குடுத்து இருக்காரு என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகி மனோஜை பார்க்கின்றனர். பிறகு வீட்டிற்கு வந்து மனோஜ் நிற்க மீனா ,முத்து ,சுருதி, ரவி என அனைவரும் மனோஜை கேள்வி கேட்கின்றனர். அண்ணாமலை அவனை ஏன் திட்றீங்கன்னு கேப்பியே இப்ப எதுக்கு திட்டறோம்னு தெரியுதா என்று சொல்ல விஜயா ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். முத்து பதில் சொல்லு என்று கேட்க அதற்கு மனோஜ் சூட் முடிஞ்சதுக்கு அப்புறம் குடுக்கலாம்னு இருந்தேன் என்று சொல்ல அதற்கு முத்து உன்னை ஏன் காசு கொடுக்கவில்லை என்று கேட்கல சந்தோஷி சார் காசு கொடுத்தார் என்று ஏன் சொல்லல என்று கேட்க மனோஜ் திருத்திருவனம் முழிக்கிறார்.
பிறகு வீட்டில் இருப்பவர் என்ன கேட்கின்றனர்? அதற்கு மனோஜின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.