நந்தினிக்கு வந்த பெரிய சிக்கல், மாதவி கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுரேகா மாதவியிடம் அருணாச்சலம் நந்தினியிடம் பேசியதை பற்றி சொல்ல இதை இப்படியே விடக்கூடாது சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லணும் என்று சொல்லி சுந்தரவல்லி இடம் போட்டுக் கொடுக்கிறார். அருணாச்சலம் சூர்யாவை திட்டி அனுப்பினதை சொல்லுகிறார். சூர்யா எவ்வளவு திமிரா இருப்பான் ஆனால் அவனையே அடக்கி வைக்குறாங்க என்றெல்லாம் சொல்லி சுந்தரவல்லியை வெறுப்பேற்றி அங்கு அனுப்ப இவர்களும் சந்தோஷமாக பின்னாடியே செல்லுகின்றனர்.
அருணாச்சலத்திடன் சூர்யா எங்கே என்று சுந்தரவல்லி கேட்க,இங்கே என்ன நடக்குது. சூர்யாவை திட்றதுக்கும் கண்டிப்பதற்கு இவ யாரு. பெத்தவன் நானே கண்டிக்கிறது கிடையாது. அவன டென்ஷன் பண்ணி அவன் பாட்டில உடைச்சிருக்கா என்று சொல்ல, சூர்யா ஒன்னும் பாட்டில உடைக்கல நந்தினி தான் ஓடச்சிருக்கா என்று சொல்ல என் பையன் மேல கோபப்பட்டு உடைக்கிற அளவுக்கு இவை யாரு. கண்டவளா கேள்வி கேட்கிறது உனக்கு புரியலையா என்று சொல்ல அருணாச்சலம் வார்த்தையை யோசித்து பேசு என்று திட்டுகிறார். நான் ஒன்னும் பண்ணலமா என்று நந்தினி பேச உடனே சுந்தரவல்லி நீ வாய மூடு நீ பேசறது எனக்கு பிடிக்கல என்று திட்டுகிறார். நல்லது கெட்டது எல்லாமே நீ மட்டும் தான் செய்யணும் உன்னால் மட்டும் தான் நடக்கணும்னு நீ நினைக்கிற, என்று சொல்ல ஆமா எனக்கு ஸ்டேட்டஸ் தான் முக்கியம், இவளுக்கு பிடிக்கவில்லை என்றால் இவ்வளவு இந்த வீட்டை விட்டு போக சொல்லுங்க என்று சொல்லிவிட்டு அனைவரும் ரூமை விட்டு கிளம்புகின்றனர். உடனே அருணாச்சலம் புஷ்பாவிடம் ரூமை கிளீன் பண்ண சொல்ல வேலைக்காரிக்கு வேலைக்காரியா அவளை செஞ்சுப்பா நீங்க போங்க என்று சொல்லிவிடுகிறார்
நந்தினி ரூமில் அழுது கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யாவின் நண்பன் மனைவி போன் போடுகிறார். எப்படி இருக்க நந்தினி என்று கேட்க நான் நல்லா இல்லக்கா நான் நல்லாவே இல்ல என்று சொல்லுகிறார்.
என்னால முடியல அக்கா மூச்சு முட்டுது, இந்த வீட்டில நரகம் போல இருக்கு என்று சொல்ல என்ன நடந்தது என்று அவர் கேட்கிறார். நடக்க கூடாதது எல்லாமே நடந்திடுச்சு அக்கா. நடந்ததை நினைச்சு அழுதா இல்ல நடக்க போறது நினைச்சு அழுறதா என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு நிமிஷமும் பயமா இருக்கு. அழ கூட என் உடம்புல தெம்பு இல்ல என்று சொல்லி அழுகிறார். அழாத நந்தினி சூர்யா அண்ணன் நல்ல மனுஷன் என்று சொல்ல தயவுசெய்து அதை மட்டும் சொல்லாதீங்க.
மனுஷனா இருந்தா மத்தவங்களுடைய பிரச்சனையை புரிஞ்சுக்கணும். இவரை எப்படி நல்ல மனுஷன் நீங்க சொல்றீங்க என்று கேட்க, நம்ப தான் அனுசரிச்சு போகணும் என்று சொல்லுகிறார்.
நான் அவர் மேல இருக்கிற உரிமையில நான் தூக்கி போட்டு உடைக்கல அந்த சரக்கு பாட்டில பாக்கும்போது எனக்கு கோவமா தான் வந்தது என்று கதறி அழுதுவிட்டு நானு அண்ணன் கிட்ட பேசுறேன் என்று சொல்லிவிட்டு பேசுங்க என்ன அனுப்பி விட சொல்லுங்க என்று சொல்ல நாங்க வர நம்ம ஒரு நாள் வெளிய போகலாம் பேசலாம் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.
நந்தினி ரூமில் இருக்க சூர்யா வாயில் பாட்டில் மற்றும் கையில் அட்டைப்பெட்டியுடன் வருகிறார். திரும்பவும் வெளியே சென்று இரண்டாவது அட்டைப்பெட்டியை தூக்கி வருகிறார். அதில் இருக்கும் சரக்கை எடுத்து முத்தம் கொடுக்கிறார். நீ நாலு ஒடச்சா நான் 40 வாங்குவேன். உடனே சரக்கு பாட்டலை கொஞ்ச ஆரம்பிக்கிறார். உன்ன எல்லாம் உடைக்கிறாங்களே அவங்களுக்கு எவ்வளவு கல்நெஞ்சம் ஆனா நீ தான் என்னோட டார்லிங் என்று முத்தம் கொடுக்கிறார். இதுக்கு மேல சரக்கு மேல கை வைக்காத என்று வார்னிங் கொடுத்த இதுக்கு மேல நீங்க குடிச்சா என்ன குடிக்கலைன்னா எனக்கு என்ன நான் எதுவும் கேட்க மாட்டேன் என்று சொல்லுகிறார். அக்கறை இருக்கிற மாதிரி சீன் போடுறியா என்று சூர்யா கேட்க, அந்த பாட்டில பார்க்கும்போது எனக்கு எரியுது, அதனாலதான் நான் தூக்கி போட்டு உடைச்சேன். இதையெல்லாம் சொல்லிவிட்டு நந்தினி தூங்கப் போக சூர்யா பாட்டில்களை இருந்த இடத்தில் அடுக்கி வைக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் என்ன சுத்தி வெறும் பிரச்சனையாத இருக்கு. வீட்டுக்கு வந்த ரெண்டு பேரால, மாபெரும் கலங்கத்தை ஏற்படுத்துச்சு.
வீட்டில் நகை காணாமல் போக நந்தினி, நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும் என்று சொல்ல, மாதவி வீட்ல இருந்தது நீ மட்டும் தான் அது எப்படி உனக்கு தெரியாம இருக்கும் என்று கேட்கிறார். நந்தினி போலீஸ் கைது செய்ய யார் காப்பாற்ற போகிறார் என்பதை பார்க்கலாம்.