முத்து மீனாவிற்கு வந்த சந்தேகம், ரோகினிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்து மீனாவிற்கு சந்தேகம் வர ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா வேலை பார்த்துக் கொண்டிருக்க முத்து வந்து நிற்கிறார். தோசை உத்தரன் என்று சொல்ல வேணா மீனா நான் சாப்பிட்டேன் என்று சொல்லுகிறார் மலேசியாவில் இருந்து வந்தவங்கள பிளைட் ஏத்துவதற்கு போயிருந்தேன் அங்க ஹோட்டல்ல சாப்பிடணும்னு ஒரே அன்பு தொல்ல அதனால் சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்லுகிறார் போன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்ல என்று கேட்க போன் பண்ணி இருக்கணும் மறந்துட்டு சாரி என்று சொல்கிறார் அந்த நேரம் பார்த்து மனோஜ் மற்றும் ரோகினி வர மனோஜை கூப்பிட்டு முத்து நான் மலேசியாவில் இருந்து ரெண்டு பேரும் கூட்டிட்டு வந்த இல்ல அவங்க சொந்தக்காரங்க மலேசியா ஜெயில்ல ஏதோ பெரிய வேலை பார்க்கிறார்களா என்று சொல்லி ஆரம்பிக்க உடனே ரோகினி வந்து நீங்க எதுக்கு இந்த வேலை எல்லாம் பார்த்து கிட்டு இருக்கீங்க.
எங்க அப்பா எப்படி போட உங்களுக்கு என்ன இனிமே எங்க பிரச்சனை இல்ல தலையிடாதீங்க என்று கோபப்பட்டு சொல்ல முத்து சரியென சொல்லி விடுகிறார். அவர்கள் கிளம்பிய பிறகு மீனா அப்பா ஜெயில்ல இருந்தா எப்படி வெளிய எடுக்கலாம் என்று தானே யோசிப்பாங்க இவங்க எதுக்கு கோவப்படுறாங்க என்று கேட்க அதே டவுட்டு தான் எனக்கும் அதனால தான் எனக்கு டவுட் அதிகமாகுது. இதுல ஏதோ ஒன்னு இருக்கு என்று மீனா சொல்ல நம்ம இந்த விஷயத்தை கண்டிப்பா துப்பறிஞ்சே ஆகணும் என்று சொல்லி ஜீவா கொடுத்த கண்ணாடியை எடுத்து இருவரும் மாட்டிக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கின்றனர். பிறகு ஒரே நேரத்தில் முதல் விசாரணையை பார்வதி ஆன்ட்டி வீட்டில் இருந்து தொடங்கலாம் என்று முடிவு எடுத்து பார்வதி வீட்டிற்கு அல்வாவுடன் இருவரும் வருகின்றனர்.
உங்களுக்கு தான் அல்வான ரொம்ப புடிக்கல சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு என்னோட பிரண்டு நல்ல வசதியா இருக்கா ஆனா வெளிநாட்டிலிருந்து வர தமிழ் பொண்ணுதான் உ வேணுமா என்று சொல்லி உங்களுக்கு ஏதாவது பொண்ணு தெரிஞ்சா சொல்லுங்க என்று கேட்கிறார் நீங்கதான் மலேசியாவில் இருந்து பார்லர் அம்மா அறிமுகப்படுத்தி வச்சிக்கோங்க அது மாதிரி ஏதாவது இருந்தா சொல்லுங்க என்று சொல்ல எனக்கு மலேசியாவில் யாரையோ தெரியாது ரோகினி மசாஜ் பண்ணிக்கிட்டு இருப்பான் நல்லா பேசுவா அவ்வளவு தான் ஒரு நாள் உங்க அம்மாவுக்கு மசாஜ் பண்ணும் போது திடீர்னு போன் வந்தது அப்பா அழுதுகிட்டே மலேசியா என்ற விஷயத்தை பத்தி சொன்னா அவ்வளவு தான் எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார். சரி நாங்க கிளம்பறோம் என்று சொல்ல, பார்வதி நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன் இருங்க என்று சொல்லிவிட்டு சொல்கிறார் உடனே மீனாவும் முத்துவும் எதுவுமே நம்ப நினைச்ச மாதிரி பதில் வரலையே என்னங்க பண்றது என்று யோசிக்க உடனே மீனா நம்ம வித்யா வீட்டிற்கு போய் கேட்டு இருக்கலாம் என்று பிளான் பண்ணுகின்றன. ஏற்கனவே நான் ரோகினி பற்றி விசாரித்து இருக்க அதே பதிலை இப்பயே சொன்னாங்கன்னா ரோகினி மலேசியாவில் இருந்து தான் வந்திருக்காங்க ஆனா அப்படி மாத்தி சொன்னாங்கன்னா இதுல ஏதோ இருக்கு என்று பிளான் பண்ணி மீனா வித்யாவின் வீட்டிற்கு போக முடிவெடுக்கிறார்.
வித்யா வீட்டிற்கு வந்த முருகன் வண்டிக்கு டிஸ்டிக் கயிறு கொடுத்து கட்டிவிட சொல்லுகிறார். உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்க வித்யா இல்லை என்று சொல்லுகிறார். சரிங்க நான் போயிட்டு வரேன் என்று சொல்லி முருகன் கிளம்ப உடனே மீனா வித்யாவின் வீட்டிற்கு பூ கொடுத்து விட்டு நலம் விசாரிக்க வித்யா நானே உங்க கிட்ட பேசணும்னு நெனச்சேன் என்று சொல்லி உண்மையா ஒரு காதலை புரிந்து கொள்வதற்கு என்ன பண்றது என்று கேட்க என்னோட கல்யாணம்தான் இப்படி ஆச்சு உங்களுக்கு தெரியுமே என்று சொல்ல இருந்தாலும் நீங்களும் முத்துவும் அண்டர்ஸ்டாண்டிங் எனக்கு ரொம்ப புடிக்கும் என்று சொல்லுகிறார் அதைவிட ரோகினியும் மனோஜ் தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்காங்க அவங்க கிட்ட கேட்கலாமே என்று சொல்ல அதை எங்க ஏற்கனவே 10 லட்சம் டென்ஷன்ல இருக்கா என்று பேச்சு ஆரம்பிக்க உடனே மீனா அதையே பிடித்துக் கொண்டு மீண்டும் அதே கேள்விகளை கேட்கிறார் ஆனால் வித்யா ரோகினியை எனக்கு காலேஜ் படிக்கும் போது தான் தெரியும் என்றும் முதலில் அவங்க அப்பாவும் வித்யாவின் அப்பாவும் பிரண்டு என்பது போல் சொல்லி தற்போது மாத்தி மாத்தி பேசுகிறார். இதனால் வித்யா குழப்பம் அடைந்து மீனாவை துரத்தும் வேலையை பார்த்து அவரிடம் பேசி அனுப்பி வைத்து விடுகிறார்.
வெளியில் வந்த மீனாவிடம் முத்து என்ன ஆச்சு என்று கேட்க எதுவுமே சரியான பதில் கிடைக்கல ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரியுது முன்னாடி நான் கேட்டப்போ சின்ன வயசுல இருந்து ரோகினி தெரியும்னு சொன்னாங்க ஆனா இப்போ காலேஜ் படிக்கும் போது தெரியும்னு சொல்றாங்க முன்னாடி ரோகினி கூட நிறைய டூர் எல்லாம் போய் இருக்கன்னு சொன்னாங்க ஆனா இப்போ அது வேற ரோகினி இது வேற ரோகினு சொல்றாங்க என்று சொல்ல அப்போ மலேசியாவில் இருந்து இவங்க வரல ஏதோ ஒரு விஷயம் நடக்குது கண்டுபிடிப்போம் என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
உடனே வித்யா ரோகினிக்கு போன் போட ரோகிணியிடம் மீனா வந்த விஷயத்தையும் விசாரித்த விஷயத்தையும் சொல்ல அவர் டென்ஷன் ஆகிறார். நீ ஏதாவது உளறிட்டியா என்று கேட்க நான் எதுவும் சொல்லல நீ ஒன்னு ரெண்டு பொய்யா சொல்லி வச்சிருக்க நான் சமாளிச்சு அனுப்புறதுக்குள்ள எனக்கு பெரிய பிரச்சனை ஆயிடும் போல இருக்கு என்று சொல்லி இதுக்கு அப்புறம் எதுவும் பேசாத என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். உடனே மனோஜ் என்ன ஆச்சு ரோகினி டென்ஷனா பேசிகிட்டு இருந்தா என்று கேட்க உங்க வீட்ல இருக்குற உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்றது என்னோட விஷயத்துல தலையிடாதீங்க என்று சொல்ல யாருன்னு கேட்டு மனோஜ் கேட்கிறார். அந்த முத்து மீனாவும் எதுக்கு என்ன பத்தி வித்யா கிட்ட விசாரிக்கிறாங்க என்று சொன்ன உன்ன பத்தி விசாரிக்க என்ன இருக்கு என்று மனோஜ் கேட்க மலேசியா என்று ஆரம்பித்த ரோகினி அப்படியே அமைதியாகி காசு தொலைந்து போன விஷயத்தை பற்றி பேசி இருக்காங்க என்று மாற்றிப் பேசி விடுகிறார். உடனே மனோஜ் நான் கேட்க நினை தப்பா நினைச்சுக்காத ரோகினி உங்க மாமா எந்த கண்ட்ரியில் இருப்பார் என்று கேட்டு பாரு 30 லட்சம் கேட்கலாம் நம்ம கடனா கேட்டு திருப்பி கொடுத்துருலாம் நீ வேணா கேட்க வேணாம் நானே கேட்கிறேன் என்று சொல்ல ரோகிணி சரி நான் பாக்குற மனோஜ் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் மீனா பூ கொடுத்துக்கொண்டு இருக்க இரண்டு பேரும் மீனாவின் பூ பெட்டியை தூக்கிக்கொண்டு சென்று விடுகின்றனர் உடனே மீனா அவர்களை துரத்திக் கொண்டு போக அவர்கள் சிந்தாமணி வீட்டிற்குள் சென்று விடுகின்றனர் அவர்கள் வேலைக்காரி ஒருவர் மீனாவை அழைத்துக் கொண்டு சாப்பாடு போட செல்ல உங்களுக்கு சொல்றது புரியலையா என்னோட பெட்டி எடுத்துட்டு வந்தவன் எங்க போனாங்க என்று கேட்டுக் கொண்டிருக்க சிந்தாமணி வருகிறார். மீனாவை வரவேற்ற சிந்தாமணி உட்கார சொல்லி சாப்பிட சொல்லுகிறார் அதெல்லாம் எனக்கு தேவையில்லை என்னோட பெட்டியை கொடுங்க என்று சொல்லுகிறார். நீ நான் பூ டெகரேஷன் பண்றதுல ஒரு கோட்டையை பிடித்து இருக்கேன் ஆனா எனக்கு எதிரா யார் வந்தாலும் எனக்கு பிடிக்காது அதுக்கு பதிலா நீ என்கூட வேலைக்கு சேர்ந்து உனக்கு எவ்வளவு சம்பளம் வேணும்னாலும் தரேன் என்று சொல்ல உடனே மீனா எனக்கு அதெல்லாம் தேவையில்லை என்னால உழைச்சு நான் பாத்துக்குறேன் நான் கண்டிப்பா பெரிய ஆளா வருவேன் உங்க கோட்டைக்கு வந்தா நீங்க ராணியா இருங்க புலிக்கு வாலா இருப்பதோட பூனைக்கு முகம் இருக்கதான்னு ஆசைப்படறேன் என்று சொல்லிவிட்டு பூ கூடையை எடுத்து வைக்க சொல்கிறார்.சிந்தாமணி எங்க வீட்டுக்கு வந்தவங்க சாப்பிடாம போக மாட்டாங்க என்று சொல்ல நான் உழைச்சு சாப்பிட்டுக்குறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் சொல்றேன் என்ன தப்பா நினைச்சுக்காதீங்க வாழு வாழ விடு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
உடனே முத்து அப்பா அப்பா என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் வர நான் இங்கதான் இருக்கேன் எதுக்குடா இப்படி கத்திக்கிட்டு வர என்று கேட்கிறார். முத்து அண்ணாமலை இடம் என்ன சொல்லுகிறார்?அதற்கு விஜயாவின் பதில் என்ன? ரோகினி எப்படி சமாளிக்க போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
