Pushpa 2

ரோபோ சங்கர் மகளுக்கு குழந்தை பிறந்தாச்சு..என்ன குழந்தை தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

ரோபோ சங்கர் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

robo shankar daughter indraja blessed with baby boy
robo shankar daughter indraja blessed with baby boy

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா பிகில் படத்தில் நடித்து பிரபலமானார்.

சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.

ஆனால் நிகழ்ச்சியில் பாதியில் இந்திரஜா கர்ப்பமானதால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது.

தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதால் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

robo shankar daughter indraja blessed with baby boy
robo shankar daughter indraja blessed with baby boy