Web Ads

கிச்சனில் பரபரப்பாக வேலை பார்க்கும் பாக்யா, வியந்து பார்க்கும் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கிச்சனில் பாக்யா வேலை பார்ப்பதை வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் கோபி.

BaakiyaLakshmi Serial Today Episode Update 21-01-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 21-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ராதிகாவிடம் இந்த ஒரு ஆர்டருக்கு மட்டும் தான் கோபியோட ஹெல்ப் கேட்டேன் அதுக்கு அப்புறம் வர ஆர்டர் எல்லாத்துக்கும் நானே ரெடி பண்ணிடுவேன் ஆட்களை என்று சொல்ல இது மட்டும் இல்ல நீங்க எத்தனை வாட்டி வேணா கோபியோட கிச்சன்ல இருந்து ஆள யூஸ் பண்ணிக்கோங்க எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை ஆனால் உங்க கிட்ட நான் உன்னை ஒன்னு கேட்கலாமா என்று கேட்க கேளுங்க என்று சொல்லுகிறார்.

ரெண்டு பேருமே தான் எந்த ஹெல்ப் வேணாலும் கேளுங்கன்னு சொன்னேன் ஆனா நீங்க ஏன் என்கிட்ட கேட்கவே இல்லை நான் எதுவுமே செய்யக்கூடாதா என்று கேட்க தெரியாதவங்க கிட்ட கூட ஹெல்ப் கேட்கலானா சொந்தக்காரங்க கிட்டையோ பிரண்ட்ஸ் உங்க கிட்ட கேட்கவே எனக்கு விருப்பம் இல்ல அவ்வளவு தானே தவிர வேற ஒன்னும் கிடையாது என்று பேசிக் கொண்டிருக்க மயூ வருகிறார் தூங்க வரலையா ஆன்ட்டி என்று கேட்க கொஞ்சம் லேட் ஆகும் மயூ இன்னைக்கு நீ உங்க அம்மா கூட தூங்கிக்கொள் என்று சொல்ல மயுவும் ராதிகாவும் தூங்க செல்கின்றனர். மறுநாள் காலையில் ஈஸ்வரி கிச்சனில் சாப்பாடு வேலை ஆரம்பிக்கும் முன் பழக்கம் போல் பூஜை செய்து ஆரம்பித்து வைக்கிறார்.பாக்கியா பிளான் எல்லாம் சொல்லி பேசிக்கொண்டிருக்க கோபி வேட்டி சட்டையில் வந்து நிற்கிறார் ஈஸ்வரி உறவு கால்ல ஏம்பா நீ இங்க வந்த என்று கேட்க எனக்கு ஆர்டரை யோசிச்சு தூக்கம் வரலாமா அதனால தான் வந்த ட்ரடிஷனலா சமைக்கிறதுனால வேஷ்டி கட்டிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். பாக்கியாவிடம் எல்லார்கிட்டயும் என்னென்ன வேலை பண்ணனும்னு சொல்லிட்டியா பாக்கியம் என்று கேட்க சொல்லிட்டேன் என்று சொல்லுகிறார். பிறகு வேலை தொடங்கி எல்லோரும் வேலை பார்த்துக் கொண்டிருக்க பாக்யா எல்லா இடத்திலும் என்ன வேலை பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டிருக்க கோபி ஈஸ்வரி இடம் இப்படி பம்பரமா வேலை செய்ற நான் பார்த்ததே இல்லம்மா என்று சொல்ல அவர் வேலைன்னு வந்துட்டா ரொம்ப சுறுசுறுப்பாயிடுவா என்று சொல்ல, கோபி வீட்டில் எவ்வளவு அமைதியா இருக்கா ஆனா நேத்து பேசும்போது எனக்கு அவ்வளவு ஆச்சரியமா இருந்தது என்று பேச அவர் திறமைசாலி கோபி என்று ஈஸ்வரி சொல்லுகிறார்.

எழில் அமிர்தா இருவரும் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க நீங்க எதுக்கு இன்னும் வேலை பார்த்து கிட்டுருக்கீங்க எழுந்து வாங்க என்று பாக்கியா கூப்பிட எழில் வர மறுக்கிறார். நீ டைரக்டர டா என்று சொல்ல வெளியே தான் டைரக்டர் எங்க அம்மாவுக்கு நான் பையன்தானே நான் செய்வேன் என்று இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து கோலா உருண்டை வேண்டும் என்று ராஜசேகர் மேனேஜர் ஃபோன் பண்ண பாக்யா என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கிறார். மட்டன் கோலா உருண்டை செய்ய மட்டன் அவ்வளவு இப்ப கிடைக்காது என்று யோசிக்க அமிர்தா வாழைப்பூ கோலா உருண்டை செஞ்சுரலாம்மாமா என்று கேட்கிறார். அதுக்கும் வாழைப்பூ உரிக்க ரொம்ப லேட் ஆகும் அது வாழைப்பூ அவ்ளோ இல்ல என்று பேசிக்கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். எழில் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டலம்மா என்று கேட்க அதெல்லாம் சொல்ல முடியாது எழில் என்று சொல்லிவிடுகிறார்

உடனே பாக்யா யோசித்து சோயா கோலா உருண்டை செய்து விடலாம் என்று முடிவு எடுத்து சோயா வாங்க செல்கிறார். கோபி எனக்கு இது மாதிரி ஒரு பிரஷர் வந்தா நான் அரை மணி நேரம் இல்ல அரை நாள் கூட ஆயிடும் ஆனா பாக்யா எவ்வளவு ஸ்மார்ட்டா யோசிச்சு முடிவு பண்ணிட்டா பாருங்க என்று பெருமையாக பேசுகிறார். கொஞ்ச நேரத்தில் வாழை இலை கட்டு வர பாக்யா இலை கட்டை செக் பண்ண சொல்லுகிறார் உள்ளே பிரித்துப் பார்த்தால் எல்லா இலையும் கிழிந்து போய் இருக்க செல்வி என்னையை இப்படி இருக்கு என்று கேட்கிறார் ஒன்னு ரெண்டு தான் பிரிஞ்சி இருக்கும் என்று சொல்ல அப்படி எல்லாம் இல்ல எல்லாமே தான் கிழிஞ்சி இருக்கு என்று சொன்னவுடன் பாக்யா கிழிஞ்ச இலை எல்லாம் எங்க தலையில கட்ட பாக்குறீங்களா என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது கோபி 50 தலை வாழை இலையை எடுத்துக் கொண்டு வாங்க என்று போன் பண்ணி சொல்லி விடுகிறார். நீங்க உங்க இலை வேற எடுத்துட்டு போங்க என்று சொல்லி அனுப்பி விடு இப்ப இலைக்கு என்ன பண்றது என்று கேட்க இன்னொரு ஆள் தெரியும் கொஞ்சம் ரேட் அதிகமா சொல்லுவாங்க பரவால்ல கேட்டு பார்க்கலாம் என்று போன் பண்ண அவர்களது போன் ஆஃப் ஆகி இருக்கிறது இதனால் டென்ஷன் ஆன பாக்கியா எழில் உடனே நான் போய் மார்க்கெட்ல வாங்கிட்டு வந்தரவா என்று சொல்ல சரி போயிட்டு வந்துரு என்று சொல்லுகிறார் ஆனால் கோபி அவர்களின் இடத்தில் அம்பது இலை சொல்லிட்டேன் இன்னும் அரை மணி நேரத்துல வந்துரும். நீங்க போய் வேலை பாருங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் கோபி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பாக்யா வேலை எல்லாம் செய்ய வேண்டாம் நீங்க உட்காருங்க என்று சொல்லுகிறார்.

அந்த நேரம் பார்த்து ராஜசேகர் வர என்ன நடக்கிறது? அவர் என்ன கேட்கிறார்? பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 21-01-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 21-01-25