சிட்டி போட்ட கண்டிஷன்,ரோகினி போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
சிட்டி ஒரு கண்டிஷனைப் போட, ரோகிணி பிளான் போட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி சிட்டியை சந்தித்து பி ஏ வை ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்ல முதலில் நீ போனிலிருந்து வீடியோவை எடுத்து எனக்கு கொடுத்த உடனே நான் அவனை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுகிறார். அவன் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்கா என்று சொல்ல வீடியோ கொடுக்காம என்னால ஒன்னும் பண்ண முடியாது என்று சிட்டி முடிவில் உறுதியாக இருக்க ரோகினி சரி எனக்கு ஒரு நாள் டைம் கொடு என்று கேட்கிறார். பிறகு வித்யாவும் ரோகினையும் வெளியே வந்து என்ன பண்ண போற என்று ரோகினி இடம் கேட்க எங்களுக்கு அனிவர்சரி வருது அதுக்கு ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்க அதுல எப்படியாவது முத்தவ குடிக்க வச்சிட்டா மட்டும் போதும் ஈசியா எடுத்துடலாம் அவன் குடிக்கலனா தான் எடுக்க முடியாது என்று பிளான் போடுகிறார்.
மறுபக்கம் முத்துவும் மீனாவும் சீதாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரை பார்க்க வருகின்றனர். அவர்கள் சீதாவின் கண்டிஷனுக்கு அவர் சம்மதிப்பாரா என்று தெரியவில்லை அப்படி சம்மதித்தால் ரொம்ப நன்றாக இருக்கும் உடனே கல்யாணத்தை பண்ணிடலாம் என்று முத்து சொல்கிறார். பிறகு ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு வர முத்து மாப்ள பிரகாசமா இருப்பான் மட்டும் தெரியும் என்று சொல்ல எப்படி சொல்றீங்க என்று மீனா கேட்கிறார். அனைய போற விளக்கு பிரகாசமா தான் எரியும் என்று சொல்ல மீனா கோபப்படுகிறார். சும்மாதான் சொன்னேன் என்று சொன்ன அவர் வந்தது இப்படி ஏதாவது பேசிட்டு இருக்க போறீங்க என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையென்று சொல்லி உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரம் பார்த்து சீதாவை திருமணம் செய்து கொள்ள போகும் நபர் வர அவரிடம் பேசுகின்றனர். முத்துவும் மீனாவும் அவர் என்ன வேலை செய்கிறார் என்று கேட்டுவிட்டு உங்களுக்கு ஏதாவது கண்டிஷன் இருக்கா என்று சொல்லுகிறார். அதற்கு சீதா சொன்ன கண்டிஷனை அப்படியே தலைகீழாக சொல்கிறார் ரெண்டு பேர் சம்பாதிக்கணும் ஆனா அம்மா வீட்டுக்கு சம்பளத்தை கொடுக்கக்கூடாது. நான் வெளியெல்லாம் எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டேன் வீட்லயும் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று சொல்ல முத்து ஒன்றும் புரியாமல் இருக்கிறார். வேற ஏதாவது கண்டிஷன் இருக்கா என்று முத்து கேட்க அதை நான் சீதாவை நேரில் பார்த்து சொல்லிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மாதுளம் பழம் ஜூஸ் குடித்ததற்கு பில் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார். முத்துவும் மீனாவும் என்னங்க இது சீதாவோட ஒரு கண்டிஷன் கூட செட் ஆகல என்று சொல்ல அதற்கு முத்து இது சீதா வாழ போற வாழ்க்கை அவ பேசி என்ன முடிவு பண்றான்னு பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார்.
மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டு எதுவுமே லாபம் வர மாட்டேங்குது டீலர்க்குதா சரியா இருக்கு என்று பேசிக்கொண்டு இருக்க இதுக்கு அப்புறம் தீபாவளி பொங்கல்லாம் வருது சரியாயிடும் என்று ரோகினி சொல்லுகிறார். இருந்தாலும் ஏதாவது ஒன்னு பண்ணனும் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஏற்கனவே ஒருவர் வந்து பிசினஸ் குறித்து பேசிய நபர் வருகிறார். அவரிடம் பெரிய ஆஃபர் கிடைத்துள்ளதாகவும் ஒரு பெரிய டீலர தேடிக்கிட்டு இருக்காங்க அதுவு இல்லாம பழைய ஆள் கிட்ட கொடுக்காம புது ஆள்கிட்ட கொடுக்க தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல அப்போ நம்ம இந்த ஆர்டர் கிடைச்சா சரியா இருக்கும் என்று ரோகினி சொல்லுகிறார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு அவர்கள் சொன்னது ஒரு பெரிய பேக்ரவுண்ட் இருக்கிற வீடு. வசதியா இருக்குறவங்கள தான் கேக்குறாங்க என்று சொல்ல அதற்கு மனோஜ் உடனே ஒருத்தன் கார் ஓட்டுறான் ஒருத்தன் சமைக்கிறான் நம்மளுக்கு எங்க கிடைக்கப் போகுது என்று சொல்லுகிறார்.
ஆனால் நான் அப்படி சொல்லல என்று அந்த நபர் சொல்லுகிறார் ஒரு தம்பி 50 கார் வச்சுக்கிட்டு மெயின்டன் பண்ணிக்கிட்டு இருப்பதாகவும் உன்னுடைய இன்னொரு தம்பி ரெஸ்டாரன்ட் ஒன்றை வைத்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறேன் என்று சொல்ல மனோஜ் மற்றும் ரோகினி அதிர்ச்சி அடைகின்றன இது பொய் சொல்ல மாட்டிக்க மாட்டோமா என்று கேட்க அவங்க என்ன வந்து உணவா செக் பண்ண போறாங்க பிசினஸ் பண்ணனும்னா ஏதாவது ஒரு பொய் சொல்லி தான் ஆகணும் என்று சொல்லுகிறார் அப்படியும் மனோஜ் யோசித்துக் கொண்டே இருக்க உங்க முகத்துல ஒரு பணக்கார முகம் இருக்கு என்றெல்லாம் பேசி மனோஜ் மைண்டை மாற்றுகிறார் பிறகு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி அவங்கள கரெக்ட் பண்ணனும் என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப மனோஜ், ரோகினி என்ன செய்யப் போகிறார்கள்? என்ன நடக்கப் போகிறது? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.