Pushpa 2

முத்துவை கஷ்டப்படுத்திய மனோஜ், ரோகினி மீது மீனாவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் முத்துவை கஷ்டப்படுத்தும் படி பேச மீனாவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வந்துள்ளது.

siragadikka asai serial today episode update 31-12-2024
siragadikka asai serial today episode update 31-12-2024

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்க வேலை செய்யும் நபர்கள் வந்து இன்னும் கிளம்பலையா சார் என்று கேட்க நான் இன்னிக்கு வேலை பாக்குறேன் லோடு வந்தா சொல்லுங்க என்று சொல்ல அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர் உடனே முத்து மனோஜிடம் வந்து ஏன் வீட்டுக்கு வரல என்று கேட்க வேலை இருப்பதாக சொல்லுகிறார். 10 மணிக்கு மேல தூங்குற ஆளு நீ வேலை பாக்குறியா? என்று கேட்டுவிட்டு நீயா சுயமா இருக்கியா இல்ல யாராவது சொல்லி இருக்கியா என்று கேட்க எனக்கு யோசிக்க தெரியாதுன்னு சொல்றியா என்று சொல்கிறார்.

சரி அதெல்லாம் விடு சாப்பிட்டு இருக்க மாட்ட உன் மூஞ்ச பாத்தாலே தெரியுது உனக்காக பிரியாணி வாங்கிட்டு வந்திருக்கேன் வந்து சாப்பிடு என்று கூப்பிட என்ன திடீர்னு உனக்கு அக்கறை என்று கேட்கிறார். இன்னும் கொஞ்ச நேரத்துல கடை இருக்காது வந்து சாப்பிடு என்று அழைத்துச் செல்ல அவரும் பிரியாணி சாப்பிடுகிறார். சாப்பிடும் போது முத்து எங்க கிட்ட எல்லாம் மறைச்சீங்க ஆனா அம்மாகிட்ட ஏன் மறைக்கணும் அது மட்டும் இல்லாம அப்பா கிட்ட சொல்லி பண்ணி இருந்தா அப்பாவே கொடுத்திருப்பார் என்று சொல்ல மனோஜ் சாப்பிட்டு முடித்துவிட்டு, இந்த மாதிரி பாசம் காட்டி ஷோரூம் வாங்கிக்கலாம்னு பாக்குறியா என்று கேட்க முத்து உடைந்து போகிறார். இப்போ நீ சாப்டல்ல ஒரு வார்த்தை என்ன சாப்பிடுறியானு கேட்டியா இல்ல சாப்டியான்னு கேட்டியா என்று கேட்க, மனோஜ் எதுவும் பேசாமல் இருக்கிறார். உன்னை ஏமாற்றி தான் இந்த ஷோரூம் வாங்கணும்னு எனக்கு அவசியமில்லை இது மாதிரி செய்ற வேலை எனக்கு தேவையே இல்லை உனக்கு போய் சாப்பாடு வாங்கிட்டு வந்தேன் பாரு என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

மறுபக்கம் மீனா ரோகினிக்கு சாப்பாடு கொடுக்க ரூமில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, மீனாவை நிறுத்தி இப்போ உங்களுக்கு சந்தோஷமா என்று கேட்கிறார். என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க மத்தவங்க கஷ்டத்துல சந்தோஷப்படுற அளவுக்கு கேவலமான ஆள் தான் கிடையாது என்று சொல்லுகிறார். இத்தனை நாளா ஆன்ட்டி உங்கள தான் திட்டிக்கிட்டு இருந்தாங்க இப்போ என்னை திட்றதுனால உங்களுக்கு சந்தோஷம் தானே உங்க வீட்டுக்காரர் தானே குற்றவாளி மாதிரி நிக்க வச்சு எல்லாரும் முன்னாடியும் அசிங்க படுத்தினார் என்று சொல்ல அவர் ஒன்னும் நீங்க பண்ணாத தப்பு சொல்லல என்னதான் இருந்தாலும் ஒன்னுத குளிப்பாட்டி வீட்டில் வைத்தாலும் என்று கிட்ட உங்களுக்கு போய் சாப்பாடு கொண்டு வந்தேன் பாருங்க என் புத்தி சொல்லணும் சாப்பிட்டு தட்ட கிச்சன்ல வச்சிடுங்க என்று சொல்லிவிட்டு மீனா வேகமாக வருகிறார். உடனே எதிரில் விஜயா வர அவளுக்கு சாப்பாடு குடுத்தியா என்று கேட்க ஆமா என்று சொல்லுகிறார் கூட்டு சேர பாக்குறீங்களா என்று கேட்க எனக்கு அந்த அவசியமில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

மீனா குடத்துடன் கீழே வர முத்து செருப்பை கையில் எடுத்துக் கொண்டு வருகிறார் என்னாச்சுங்க ஏதாவது தைக்கணுமா என்று கேட்க அந்த செருப்பாலே பிஞ்சு போற அளவுக்கு என்ன அடி மீனா என்று சொல்லுகிறார். எதுக்காக அடிக்கணும் என்று கேட்க மனோஜ் நடந்து கொண்ட விஷயத்தை சொல்லுகிறார் உடனே என்னையும் அதே செருப்பாலேயே அடிங்க என்று சொல்ல என் ஆச்ச மீனா என்று கேட்க ரோகினி நடந்து கொண்ட விஷயத்தையும் சொல்லுகிறார். இதுக்கு மேல இவங்க ரெண்டு பேருக்கும் எந்த உதவியும் பண்ண கூடாது அவங்க எப்ப நான் போட்டோ எதுவும் பேசக்கூடாது என்று சொல்லி முடிக்கின்றனர்.

பூக்கடையில் மீனாவின் குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருக்கிற நடந்த விஷயங்களை குடும்பத்தாரிடம் சொல்ல சீதா உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி பேசுச்சு தேவைதான் என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாமல் சத்தியா அடிக்கடிக்கு சிட்டி கிட்ட வந்து காசு வாங்கும் விஷயத்தை சொல்ல மீனாவிற்கு இன்னும் சந்தேகம் அதிகரிக்கிறது. ரோகினி பற்றி ஒவ்வொரு விஷயமும் தெரியும்பொழுது அவங்க எப்படி பட்டவங்க அவங்க எங்கிருந்து வந்திருக்காங்க என்பதுதான் யோசிக்க தோணுது என்று நினைக்கிறார். சித்தி கிட்ட ஏன் பணம் வாங்கணும் என்று யோசிக்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த மனோஜ் கதவை தட்ட ரோகினி திறக்காமல் இருக்கிறார். பிறகு என்ன நடக்கிறது? விஜயா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 31-12-2024
siragadikka asai serial today episode update 31-12-2024