Pushpa 2

மலேசியா போக உறுதியாக இருக்கும் விஜயா, ரோகிணி போட்ட திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மலேசியா போக விஜயா உறுதியாக இருக்க ரோகிணி திட்டம் ஒன்று போட்டுள்ளார்.

siragadikka asai serial today episode update 22-01-25
siragadikka asai serial today episode update 22-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து பாஸ்போர்ட் வாங்க ஒரு பேப்பரில் அண்ணாமலை இடமும் விஜயாவிடமும் கையெழுத்து கேட்கிறார். இவ்வளவு நாள் ஜெயில்ல இருக்காங்க நம்ம போய் பார்க்கலாம் அங்கதான் உங்களுக்கு வீடு இருக்குல்ல அதுவு இல்லாம அவரோட வைப் இருக்காங்க நம்ம போய் பாத்துட்டு வந்துடலாம் என்று முத்து சொல்ல அண்ணாமலை அவர் இல்லாத நேரத்தில் போனா எதுனா தப்பா ஆயிட போகுது என்று கேட்க விஜயா அதெல்லாம் ஒன்னும் ஆகாது நம்ம ரோகிணிக்காக போய் தான் ஆகணும் என்று முடிவில் உறுதியாக இருக்கின்றனர். பிறகு ரோகிணியும் மனோஜும் ரூமுக்குள் சென்றுவிட ரோகினி உன் தம்பி எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா என்று கேட்க அதற்கு மனோஜ் ஆமா ஃபர்ஸ்ட் நம்ப தான் மலேசியா போக முடிவு எடுத்திருக்கணும் அவன் எடுத்துட்டான் என்று சொல்லிவிட்டு போக ரோகிணி நான் ஒன்னு பேசுனா இவன் ஒன்னும் பேசலாம் என்று சொல்லிவிட்டு டென்ஷனாகிறார்.

மறுபக்கம் முத்து மேலே இருக்க மீனா உடனே கோபப்பட்டு சேர்த்து வச்சிக்கிற காசெல்லாம் சிங்கப்பூர் போய் செலவு பண்ண பாக்கறீங்களா அங்க போய் ரெண்டு போட்டோ எடுத்துட்டு வந்து வீட்டில் மாட்டனா சரியா போயிடுமா என்றெல்லாம் கோபப்பட முத்து எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார் நான் பேசிக்கிட்டே இருக்கேன் எதுவும் பதில் சொல்ல மாட்டீங்களா என்று கேட்க நீ எப்போ பேசி முடிவு பண்ண வெயிட் பண்றேன் என்று சொல்லி பிறகு நான் பேசி முடிச்சிட்டேன் என்று மீனா சொல்லுகிறார் உடனே பாக்கெட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து முத்து போட்டுக்கொண்டு ஹீரோ வாக் செய்து ஒரு பொசிஷன் இல் நின்று இந்த பக்கமும் அந்த பக்கமும் பார்த்துக் கொண்டிருக்க மீனா நான் இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கேன் என்று கேட்க ஹீரோ எல்லாம் இப்படித்தான் பண்ணுவாங்க பார்த்ததில்லையா என்று கேட்கிறார். நம்ம மலேசியா எல்லாம் போகல நம்ம என்ன பிளான் பண்ணனும்னு மறந்திருச்சா என்று சொல்லி முத்து மீனாவிற்கு கண்ணாடியை போட்டு விடுகிறார். நம்ம போகணும்னு நினைச்சாலும் பார்லர்மா போக விடாது. ஏதாவது நாடகம் ஆடி பிளான் போட்டு நம்மள தடுத்து நிறுத்திடும். அப்படி நிறுத்துனா கன்பார்ம் ஏதோ ஒரு விஷயம் இருக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம் என்று சொல்லுகிறார். அவங்க எதுவும் சொல்லாம கிளம்பிட்டாங்கனா என்று மீனா கேட்க அதற்கு முத்து நம்ப வேலைய பாத்துட்டு போக வேண்டியதுதான் என்று சொல்லுகிறார் உடனே மீனா கண்ணாடியை மாட்டிக்கொண்டு அப்படி ஒரு தப்பான முடிவு எடுக்கக் கூடாது அவங்க போகலாம்னு சொல்லிட்டு போக முடியாத சுச்சுவேஷன் ஏற்படுத்திட்டாங்கன்னா என்ன பண்ணுவீங்க என்று கேட்க இதுவும் கரெக்டான கேள்விதான் என்று சொல்லுகிறார். அவங்க விஷயத்துல ஏதோ ஒரு மர்மம் இருக்கு கண்டுபிடிச்சே ஆகணும் அதுதான் நம்ம குடும்பத்துக்கும் அவங்களுக்கு கூட நல்லதா இருக்கலாம் என்று மீனா சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறுநாள் காலையில் முத்து ரோகினி காதில் விழும் படி அண்ணாமலையே சத்தமாக கூப்பிட்டு பாஸ்போர்ட்டுக்கு எல்லாம் ரெடி ஆயிடுச்சு நான் போய் ஆபீஸ்ல கொடுத்துட்டு வந்தேன் என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் வருகின்றனர். அண்ணாமலை உனக்கு வேற செலவு அதிகமாக இருக்கும் எதுக்குடா இந்த வேலை நான் எதுவும் சொல்லிட்டேன்றதுக்காக இப்படி பண்ற என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லப்பா நம்ம ஒரு ஃப்ளைட்டுக்கு மட்டும்தான் செலவு பண்ண போறோம் அங்க போய் தான் சம்மந்தி வீட்டுக்காரங்க எல்லாம் பார்த்துப்பாங்கோ என்று சொல்லுகிறார். போயே ஆகணுமா என்று கேட்க போனால் தானப்பா அந்த குடும்பத்துக்கு நம்மளக்கும் என்று ஆரம்பிக்க பேர் சொல்ல தெரியாததால் ரவியிடம் என்னடா அது என்று கேட்க பாண்டிங் என்று சொல்லுகிறார் அப்பதா ரெண்டு குடும்பத்துக்கும் பாண்டிங் ஏற்படும் என்று சொல்ல விஜயாவும் ஆமாம் என்று சொல்லுகிறார். நீ ஏம்பா பாஸ்போர்ட் எடுக்காம இருக்க என்று சொல்ல விஜயா இவர் எங்க கூட்டிட்டு போயிருக்காரு எங்கேயோ கூட்டிட்டு போனதே கிடையாது என்று சொல்ல உன்ன தான் தாஜ்மஹால் கூட்டிட்டு போனாங்க என்று அண்ணாமலை சொல்லுகிறார். ஆமா கல்யாணம் ஆன புதுசுல கூட்டிட்டு போனீங்க அதோட இப்ப வரைக்கும் இன்னும் சென்னையே தாண்டல என்று பேசுகிறார். அதுதான் இப்ப மலேசியா போரோல்ல என்று சொல்ல அது உங்களால போல என்று சொல்ல, உடனே மனோஜ் ரோகினி ஆளப் போரோம் என்று சொல்லுகிறார். உடனே நீங்களும் வாங்க என்று கூப்பிட ரோகினி எங்களுக்கு வேலை இருக்கு எங்களால வர முடியாது என்று சொல்லுகின்றனர். மனோஜ் நம்மளும் போயிட்டு வந்துரலாம் ரோகிணி என்று சொல்ல 30 லட்சம் கடன வச்சிக்கிட்டு எப்படி போக முடியும் அதை அடைக்கிறதுக்கான வழியை பார்க்கலாம் என்று சொல்ல, முத்துவிற்கு சந்தேகம் அதிகமாகிறது. சரி நீங்க போய் உங்க வேலைய பாருங்க நான் போயிட்டு வரேன் என்று சொல்லி முத்து வெளியில் கிளம்ப மீனா நீங்க சொன்ன மாதிரியே ஏதோ காரணம் சொல்றாங்க பாருங்க என்று சொல்ல இது மட்டும் இல்ல மீனா நாங்க போக விடாத மாதிரி ஒரு காரணத்தை ரெடி இந்த பார்லர் அம்மா ரெடி பண்ணனும் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

ரோகினி ரூமில் அழுது கொண்டிருக்க மனோஜ் என்னாச்சு ரோகினி எதுக்கும் அழுவுற என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி எங்க அப்பா ஜெயில்ல இருக்கிற நேரத்துல போய் பார்த்தாக்கா அவரோட மனசு குற்ற உணர்ச்சியா இருக்காதா இந்த குடும்பத்துல என்ன முடிவெடுத்தாலும் நீ எனக்காக எதுவுமே பேச மாட்ற முத்து எப்படி அவங்க பொண்டாட்டி விட்டுக் கொடுக்காம எல்லா விஷயத்தையும் பேசுறா ஆனா நீ எனக்காக இதுவரைக்கும் ஏதாவது ஒரு விஷயம் பேசி இருக்கியா இப்போ ரோகினி மனசு கஷ்டப்படும். யாரும் மலேசியாவுக்கு போக வேண்டாம் என்று எதனா சொன்னியா என்றெல்லாம் கேட்கிறார். அதுவும் இல்லாம அங்க போயி என்ன செலவு பண்ண சொல்றாங்க ஏற்கனவே எங்க அப்பாவோட பேங்க் பேலன்ஸ் எல்லாம் டிராப் பண்ணி வச்சிருக்காங்க நான் எப்படி செலவு பண்ண முடியும் யாரும் அங்க போக வேண்டான்னு சொல்லுங்க என்று சொல்ல மனோஜ் வேகமாக வெளியே வந்து அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் பேசுகிறார்

நீங்க யாரும் மலேசியாவிற்கு போக வேண்டாமா என்று சொல்லிக் கொண்டே இருக்க கிச்சனிலிருந்து முத்துவும் மீனாவும் வருகின்றனர். இந்த நேரத்துல போனா ரோகினி ஓட அப்பா ரொம்ப கஷ்டப்படுவாரு இந்த நேரத்துல வந்து இருக்குறோமேன்னு வருத்தப்படுவாரு என்று சொல்ல முத்து அது எப்படி வருத்தப்படுவார் இதே அவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்துட்டார்னா நம்ம கஷ்டத்துல இருக்கும்போது ஒருத்தரும் வந்து பார்க்கல ஆனா இப்போ வந்து பாக்குறாங்கன்னு நினைக்க மாட்டாங்களா. அப்போ நம்ம என்ன பேச முடியும். என்று சொல்ல விஜயா யோசிக்கிறார். உடனே மீனாவும் சம்மந்தி வீட்டுக்காரங்க ஜெயில்ல இருக்கும்போது நம்ம ஒரு தாட்டி கூட போய் பாக்கலனா அவங்க என்ன நினைப்பாங்க அவங்க போய் பார்த்தா தானே நம்ம பொண்ணு நல்ல குடும்பத்தில் தான் வாக்கப்பட்டு இருப்பானு ஒரு நம்பிக்கை வரும் என்று எல்லாம் பேசுகின்றனர். உடனே விஜயா எல்லாத்தையும் யோசித்து உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் அவன் லூசு மாதிரி ஏதாவது பேசிக்கிட்டு இருப்பாமா அவன் பேச்சைக் கேட்காதீங்க என்று சொல்ல அவன் அது மாதிரி தான் பேசுவான் ஆனா இப்ப பேசுறது எல்லாமே கரெக்டா தான் பேசுகிறான் என்று சொல்ல அண்ணாமலை முத்து மீனா மூவரும் அதிர்ச்சியாகி பார்க்கின்றனர். நாளைக்கு வந்து ஏன் எங்கள பாக்க வரலைன்னு கேட்டா நம்ம முகத்தை எங்க வச்சுக்கிறது என்று விஜயா சொல்ல அடகு கடைலயா வைக்க முடியும் என்று முத்து கேட்கிறார். மலேசியாவிற்கு போயிட்டு வர்றது தான் சரியா இருக்கும் என்று விஜயா சொல்லிவிட்டு கிளம்புகிறார் உடனே அண்ணாமலை இடம் நீங்களாவது சொல்லுங்கப்பா என்று சொல்ல நான் ஒன்னும் சொல்றதுக்கு எல்லா வேலையும் முடிவெடுத்துடா சம்மந்திய போய் பாத்துட்டு வந்துருலாம் என்று சொல்ல மனோஜ் எதுவும் சொல்ல முடியாமல் ரூமுக்கு செல்ல ரோகினி கோபமாக இருக்கிறார்.

முத்துவிடம் மீனா நீங்க சொன்ன மாதிரியே நடக்குது என்று சொல்ல ஆனா அத்தை உங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாங்க என்று சொல்லுகிறார் அவங்க மலேசியா சம்மந்திய போய் பாக்குற முடிவுல இருக்காங்க என்று சொல்ல, அதான் நம்ம போக போறது இல்லையே என்று மீனா கேட்கிறார் அதுக்கப்புறம் என்ன பண்ண போறோம் என்று கேட்க, இதுக்கப்புறம் போக விடாம பண்றதுக்கு இன்னொரு பிளான் நடக்கும் அப்ப பார்த்துக்கிறேன் என்று முத்து சொல்லுகிறார்.

சுருதி வேக வேகமாக ரூமுக்கு வந்து ரவியிடம் இன்னைக்கு சீரியல்ல ஒரு டப்பிங் பேசின அதுல என்ன நடந்துச்சு தெரியுமா ஹஸ்பண்ட் ஒய்ஃப் கூட டைம் ஸ்பென்ட் பண்றது இல்லன்னு வைஃப் டைவர்ஸ் வாங்கி இருக்காங்க என்று சொல்ல சுருதி நீ என்கூட எவ்வளவு நேரம் டைம் ஸ்பென்ட் பண்ற என்று யோசிக்க எல்லாம் கணக்கு போட்டு ஒரு ரெண்டையிலிருந்து மூன்று மணி நேரம் என்று சொல்லுகின்றனர். உடனே சுருதி மத்தவங்க கிட்டையும் கேட்கலாம் என்று வேக வேகமாக வந்து மனோஜ் மற்றும் ரோகினி இடம் கேட்கிறார். அவர்கள் ஒரு ஒன்பது மணி நேரம் இருக்கும் என்று சொல்ல கேட்டுக்கோடா என்று சொல்லுகிறார். மீனாவும் முத்து விடவும் கேட்க அவர்கள் 10 மணி நேரம் என்று சொல்ல ஆப் டே வைப்காக ஸ்பெண்ட் பண்றாங்க தெரிஞ்சுக்கோ என்று சொல்லுகிறார் இப்ப என்ன ஆச்சு ஸ்ருதி எதுக்காக இப்படி பேசிகிட்டு இருக்கீங்க என்று சொல்ல ரவி சீரியல் என் வாழ்க்கையில் விளையாடுது. அவ பேசுன டப்பிங் ல வைப்காக டைம் ஸ்பென்ட் பண்ணாததுனால வைஃப் டைவர்ஸ் வாங்கி இருக்காங்களாம். அதை பத்தி பேசிகிட்டு இருக்கா என்று சொல்லுகிறார். உடனே மீனா அவங்கவங்க வேலையை பொறுத்துதான் ஸ்ருதி நீங்க ரெண்டு பேரும் அதிகமா டைம் இருக்கிற வேலையை பாக்குறீங்க அதனால என்ன ஒரு நாளைக்கு எங்கேயாவது வெளியில் போயிட்டு வாங்க சந்தோஷமா இருங்க என்று சொல்ல, உடனே முத்து வேணும்னா வாங்க நம்மளும் மலேசியா போகலாம் என்று சொல்ல ரோகினையின் முகம் மாறுகிறது. ஸ்ருதியும் இதுவும் நல்ல ஐடியா தான் ஒரு வாரம் நீயும் லீவ் சொல்லிடு நானும் லீவ் சொல்லிடுறேன் நம்ம போய் ஜாலியா இருந்துட்டு வரலாம் என்று முடிவு எடுக்கின்றனர். இதனால் ரோகிணி உள்ளே சென்றுவிட சுருதி ரவியை சமாதானம் செய்கிறார்.

பிறகு மீனாவும் முத்துவும் நடந்து விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க இதனால ரவியும் ஸ்ருதியும் ஏமாந்து போக மாட்டாங்களா என்று சொல்ல அவங்க வேணா தனியாக கூட போயிட்டு வரட்டும் அவங்களும் எங்கேயும் வெளியே போகல இல்ல அதுவும் இல்லாம இப்பவே பார்லர் அம்மா இதை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு பெரிய பிளான் போடும் பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார் நம்ம எங்கேயாவது இதே மாதிரி வெளியே போகணும் என்று சொல்ல உனக்கு ஏதாவது ஊருக்கு போனேனா சொல்லு என்று சொல்லுகிறார்.உடனே மீனா ஊட்டிக்கு போகணும் என்று சொல்ல சரி போய்ட்டா போகுது இது பிரச்சனை எல்லாம் மூடிட்டு போயிட்டு வரலாம் என்று சொல்லுகிறார்.

வித்யா வீட்டிற்கு சென்ற ரோகினி என்ன பேசுகிறார்? பிரவுன் மணியை வரவைத்து என்ன சொல்லுகிறார்?அதற்கு அவரின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 22-01-25
siragadikka asai serial today episode update 22-01-25