மயங்கி கிடந்த சீதா, முத்து, அருண் இடையே உருவான வாக்குவாதம்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!
சீதா மயங்கி கிடக்க, அருண் மற்றும் முத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

siragadikka asai serial today episode update 05-06-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதா அருண் விஷயத்தை அண்ணாமலை இடம் சொல்ல சீதா படிச்ச பொண்ணு அவ ஒரு பையனை தேர்ந்தெடுக்குறானா கரெக்டா தான் இருக்கும் முத்து ஒருத்தர் மேல கோவப்பட்டால் இப்படித்தான் பண்ணுவான் நான் வேணா பேசவா என்று சொல்ல வேணாம் மாமா இப்பத்திக்கு பேசுனா நான் உங்ககிட்ட பேச சொன்னதாக சொல்லி சண்டை போடுவாரு நானே பொறுமையா பேசி பார்க்கிறேன் என்று சொல்ல அவரும் சென்று விடுகிறார் கொஞ்ச நேரத்தில் விஜயா வந்து மீனாவிடம் முத்து நேத்து எதுக்கு அப்படி பண்ணிக்கிட்டு இருந்தான் என்ன பிரச்சனை ஏதோ கோடு போட்டு தாண்ட எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தான் ஏன் அவன் போட்ட கோட நீ தாண்டிவிட்டாயா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கு மீனா அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை குடிச்சிட்டு வந்தாரு, அதனால அது கேட்டுகிட்டு இருந்தேன் என்று சொல்ல அவன் எப்போ குடிக்காம இருந்திருக்கான் என்று சொல்ல முத்து வருகிறார். என்னடா நடக்குது என்று கேட்க நான் தான் நடக்கிறேன் என்று சொல்லுகிறார். நேத்து எதுக்கு கோடலாம் போட்டு தாண்ட சொன்னேன் என்று பேசிக்கொண்டு இருக்க வாசலில் வாயில் பெரிய கட்டுடன் மனோஜ் ரோகிணி வந்து நிற்க முத்து அவரைப் பார்க்கிறார் உடனே விஜயா மனோஜை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்கிறார்.
உள்ளே வந்த உடன் ரோகினி அவரை உட்கார வைத்த என்னடி ஆச்சு என் பையனை என்ன பண்ண என்று கேட்க தெரியவில்லை என்று கீழே விழுந்துட்டேன்னு சொன்னாரு காலையில வாய் வீங்கி இருந்தது அதனால ஹாஸ்பிடல் கூட்டிட்டு போன என்று சொல்ல முத்து அது என்ன சின்னதா ஓட்ட மாதிரி இருக்கு வாயில என்ற கேட்க ஜூஸ் தான் கொடுக்க சொல்லி இருக்காங்க ரெண்டு நாளைக்கு என்று சொல்லுகிறார். என்கிட்ட சொல்லாம நீயே எதுக்கு கூட்டிட்டு போன என்று விஜயா ரோகினி மீது கோபப்பட மனோஜ் சைகை காட்ட அதனை ரோகிணி பயன்படுத்திக் கொள்கிறார் அதாவது அடிப்பட்டு இருக்கும்போது வந்து உங்களை எழுப்பிட்டு இருப்பாங்களா அதான் ரோகிணி இருக்கா இல்ல அவ கூட்டிட்டு போனா விடுங்கன்னு மனோஜ் சொன்ன மாதிரி ரோகின்னு சொல்லிவிட மனோஜ் முழிகிறார். அண்ணாமலை வந்து என்ன ஆச்சு என்று கேட்க அவனுக்கு வாய்ப்பு கொழுப்பு அதிகமா இருக்கு அதனால தான் என்று சொல்லுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் விஜயா மனோஜை அழைத்துச் சென்று விடுகிறார்.
மறுபக்கம் சீதா வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறார் சந்திரா வந்து எழுந்து வா சீதா சாப்பிடுவ நீ என்ன சாப்பிட்டிருக்க போற என்று தட்டில் சாப்பாடு போட்டு வைத்துவிட்டு மீண்டும் கூப்பிட வராததால் பக்கத்தில் சென்று எழுப்புகிறார் ஆனால் உடம்பு என்ன இப்படி கொதிக்குது என்று அலறி சீதாவை எழுப்ப சீதா எழுந்து கொள்ளாமல் இருக்க சந்திரா பதறுகிறார் உடனே சத்யா வர அவரும் சீதா சீதா என்று எழுப்ப எழுந்து இருக்காதால் ஆட்டோவில் சீதாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர் வழியில் அருண் வேலை பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் ஆட்டோவில் செல்வதை கவனித்து அவர்களை பின்தொடர்கிறார். மீனா முத்துவிடம் அவருக்கு எப்படி அடிபட்டிச்சு நீங்கதான பேசிகிட்டு இருந்தீங்க என்ன நடந்துச்சு என்று சொல்ல அவன் தான் சொன்னானே கீழே விழுந்துட்டான்னு சொல்ல அது உண்மை இல்லை எது ஒன்றும் நடந்திருக்கிறது சொல்லுங்க என்ன பேசிக் கொண்டிருக்க சந்திரா போன் போட்டு சீதாவை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்கும் விஷயத்தை சொல்லுகிறார்.
உடனே முத்து மீனா பதறி போய் ஹாஸ்பிடலுக்கு வர மறு பக்கம் அருண் மற்றும் அவரது அம்மா இருவரும் ஆஸ்பத்திரியில் இருக்க அருண் மெடிசன் வாங்கிக் கொண்டு வந்து நிற்க முத்து மற்றும் அருண் இருவரும் முறைத்துக் கொண்டு இருக்கின்றனர். பிறகு இவர்கள் இருவருக்கும் என்ன நடக்கிறது? சீதாவின் உடல்நிலை குறித்து டாக்டர் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 05-06-25