சுந்தரவல்லி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 05-06-25
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி இடம் கல்யாணம் நந்தினி கோலம் போட்ட விஷயத்தை சொல்ல, வீட்டை விட்டு போக முடிவெடுத்ததுனால கடைசியா எல்லா வேலையும் செய்றாளா, இந்த வீட்ல இருந்து ஒழிஞ்சா சரி என்று நினைத்து விட்டு சென்று விடுகிறார். உள்ளே வந்து உட்கார்ந்தவுடன் மாதவி சுரேகா அசோகன் மூவரும் வந்து எதுக்கு ரெடியாகி வர சொன்னீங்க என்ன விஷயம் என்று கேட்க, நம்ம வீட்டுல விசேஷம் நடக்கப் போகுது அதுக்கு தான் ரெடியாக சொன்னேன் என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்க வெயிட் பண்ணி பாருங்க என்று சொல்லுகிறார். அருணாச்சலம் இவர்களை பார்த்துவிட்டு இது நல்லதுக்கில்லையே என்று நினைத்து விட்டு வந்து உட்காருகிறார்.
அருணாச்சலம் கல்யாணத்தை கூப்பிட்டு காபி கேட்க மற்றவர்கள் டீ கேட்கின்றனர். மறுபக்கம் நந்தினி துணிகளை எடுத்து வைக்க சாமி போட்டோவை எடுக்கப் போக வேண்டாம் என முடிவு செய்து நீதான் சூர்யா சார் அவர் குடும்பத்தையும் பாத்துக்கணும் என்று சொல்லுகிறார். என்னோட கஷ்டமும் அழுகையும் இந்த நாலு செவத்துக்கு தான் தெரியும். சூர்யா சார் கெளம்புனு சொன்னாலும் எப்படி சொல்லாமல் போகிறது என்று யோசித்து நிற்க, பிறகு அவர் சொல்லியதை நினைத்து விட்டு கிளம்ப வாசல் வரை சென்று மீண்டும் சூரியா பக்கத்தில் வந்து ரொம்ப நன்றி சார் இப்பவாவது என் நிலைமை உங்களுக்கு புரிஞ்சதே என் வாழ்க்கையில மறக்க முடியாத நபர் என்றால் அது நீங்க தான், நீங்க குடிச்சிட்டு வந்தா கூட ஒரு நாள் கூட என் கூட அத்துமீறி நடந்ததில்ல, என் பக்கம் நின்னு பேசினீங்க அது எனக்கு எவ்வளவு ஆறுதலா இருந்ததுன்னு உங்களுக்கு சொல்லல, நான் உங்க கூட இருக்கும்போது ரொம்ப பாதுகாப்பா உணர்ந்தேன். எனக்கு தாலி கட்டின விஷயத்தை விட எல்லா நேரமும் நீங்க எனக்கு நல்லவரா தான் தெரிந்திருக்கீங்க.
ஐயா உங்க குடியை நிறுத்த ஏதாவது பண்ணனும்னு சொன்னாரு ஆனா என்னால முடியல, திரும்பவும் உங்களோட வாழ்க்கைல பாப்பனான்னு தெரியாது அப்ப பார்த்தா நீங்க குடிக்காத மனுஷனா இருக்கணும். உங்களுக்கு ஒரு அழகான குடும்பம் கிடைச்சிருக்கு சந்தோஷமா இருங்க இந்த வீட்ல கஷ்டத்தை அனுபவிச்சிருந்தாலும் இந்த ரூமுக்கு வந்தா ஆறுதல் இருக்கும் அதுக்கு காரணம் நீங்கதான் என்று சொல்லி அழுகிறார். எந்த காலத்திலும் உங்களை என்னால மறக்க முடியாது எல்லாத்துக்கும் நன்றி என்று காலை தொட்டு கும்பிட்டு விட்டு வெளியில் வந்து செடிகளை பார்த்து செடிகளுடன் பேசுகிறார். உங்களை கல்யாணம் அண்ணன் நல்லபடியா பார்த்து பாரு நான் வரேன் என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி நேராக கிச்சனுக்கு வந்து கல்யாணத்திடம் நான் எங்க வீட்டுக்கு போறேன் என்று சொல்ல சரி போயிட்டு வாமா என்று சொல்ல எதுக்குமா பேக் என்று கேட்கிறார் நான் மொத்தமாக போறேன் என்று சொல்லுகிறார். உடனே கல்யாணம் கோபப்பட நான் போய் ஐயா கிட்ட சொல்றேன் என சொல்ல என்ன போக சொன்னது சின்னையா தான் என்ன வீட்டுக்கு போக சொல்லிட்டாரு அதனாலதான் கிளம்புறேன் என்று சொல்ல உடனே கல்யாணம் நிஜமாவே போறியா தாயே என்று கண்கலங்குகிறார். இதனை ரேணுகா கவனிக்கிறார்.
உடனே கல்யாணம் எனக்கு சொந்த பந்தம் யாரும் இல்லை எனக்கு உறவுன்னு சொல்ல வேற யாரும் இல்ல, நீ மட்டும் தான் இருந்த இப்போ அண்ணன் விட்டு போக முடிவு பண்ணிட்ட, இனிமே நீ அண்ணன்னு கூப்பிடறது என் காதில் கேட்காத என்று சொல்ல உங்களுக்கு போன் பண்ணி பேசுவேன் அண்ணா. சின்ன சண்டையா இருந்தாலும் பெரிய சண்டையா இருந்தாலும் நீங்க சொல்ற ஆறுதல் எனக்கு பாதி மன அமைதிய கொடுக்கும் என்று சொல்ல, இதுக்காக தான் எல்லா வேலையும் காலையிலிருந்து செஞ்சியா என்று கேட்டுவிட்டு நந்தினிக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக இரண்டிலும் குங்குமம் வைத்ததை நினைத்துப் பார்க்கிறார். நீ எங்கேயும் போகக்கூடாது அண்ணன் உன்ன போக விடமாட்டேன் என்று சொல்ல, கல்யாணம் அருணாச்சலம் இருப்பதை கவனிக்கிறார். உடனே நந்தினி கிச்சனிலிருந்து வெளியே வருகிறார்.
சுரேகா சுந்தரவல்லி இடம் நீங்க சொன்னது அப்போ புரியல இப்பதான் புரியுது எப்படி இப்படி எல்லாம் நடக்குது என்று கேட்கிறார். உடனே ஏய் தென்னை மட்டை நிஜமாகவே போறியா இல்ல இந்த வாட்டியும் சீன் போடறியா என்று கேட்க, மாதவி என்ன நந்தினி அமைதியா இருக்க நிஜமாவே போக போறியா என்று கேட்க நந்தினி ஆமாம் என்று சொல்லுகிறார். என்ன நந்தினி இதெல்லாம் யாரைக் கேட்டு இந்த முடிவு எடுக்கிற யாராவது உன்னை மிரட்டுனாங்களா என்று அருணாச்சலம் கேட்க, யாரும் எதுவும் சொல்லலையா என்று நந்தினி சொன்னவுடன் பாருங்க அவளை சுயமா ஒரு முடிவு எடுத்து இருக்கா அதுக்கும் எங்க தலையை தான் போட்டு உருட்டுவீங்களா என்று சுந்தரவல்லி கேட்கிறார். ஏன்னா நீங்க எல்லாரும் தானே இந்த வீட்ல இருந்தா போனா சந்தோஷம்னு நினைச்சீங்க சின்ன சின்ன விஷயத்துக்கும் நீ அவளை வெளியே தள்ளன என்று கோபப்பட இப்ப எதுக்கு அதெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க என்று சுந்தரவல்லி எதிர்த்து கேட்கிறார். இதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் விடுங்க ஐயா இப்போ வீட்டை விட்டு போகணும்னு முடிவு எடுத்ததற்கு காரணம் நான் தான் யாரும் என்னை மிரட்டல சொல்லப்போனால் நான் வீட்டை விட்டு போறது யாருக்கும் தெரியாது என்று சொல்ல உடனே சுந்தரவல்லி அவளை வீட்ட விட்டுப் போனாலும் அந்த பழி நம்ம மேல தாண்டி விழும் என்றும் சொல்லுகிறார். அதற்கு அருணாச்சலம் அது நந்தினி ஓட முடிவாக இருந்தாலும் நேத்து நைட்டு நீ மாமனாரா நடிக்கிறீங்க புருஷனா நடிக்கிறான்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம் அப்ப ஏதோ ஒரு விஷயம் உனக்கு தெரிஞ்சிருக்கு அப்படித்தானே என்று கேட்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் தாலி கட்டி வந்த முதல் நாளே இந்த வார்த்தையை உங்ககிட்ட சொல்லி இருந்தேன் அதுக்கான நாள் வந்துடுச்சு நான் கிளம்புகிறேன் என்று சொல்லுகிறார். இவ போய்ட்டா ஒரு பணக்காரியா மருமகளா கூட்டிட்டு வருவாங்களே, அப்ப நம்ம பொழப்பு என்ன ஆகும் என்று மாதவி பயப்படுகிறார்.
நீங்க மட்டும் அவளுக்கு சப்போர்ட் பண்ணலேன்னா அவளை எப்பயோ வீட்டை விட்டு துரத்தி இருப்பேன் என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். உடனே நந்தினி நான் கொஞ்சம் பேசலாமா என்று கேட்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 05-06-25