கோலாகலமாக நடந்து முடிந்த சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி மற்றும் வைஷ்ணவி நிச்சயதார்த்தம்,குவியும் வாழ்த்து..!
சிறகடிக்க ஆசை சீரியல் முத்துவின் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் முத்து என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த்.
தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பொன்னி சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவியை காதலித்து வருவதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாகவும், தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தற்போது அவருக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது அதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
View this post on Instagram