மீனா உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வேலைக்காரன் சீரியல் பிரபலம் பிரியா பாலகுமாரன். எதார்த்தமான நடிப்பை கொடுத்து பாராட்டுகளை பெற்று வரும் இவர் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மாமியாராக நடித்து வரும் நடிகையுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். சீரியலில் மாமியார் விஜயா மருமகள் மீனாவை பெரிதாக கண்டு கொள்ளாமல் இப்போது வேலைக்காரி போல நடத்தும் நிலையில் இப்படி இருவரும் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.