கோவிலில் சாமி கும்பிடாமல் மீனா முத்துவை சைட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்து மீனாவாக நடித்து வரும் விஜய் வசந்த் மற்றும் கோமதி பிரியாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குறித்து வருகிறது.

சூப்பர் ஜோடி என நாளுக்கு நாள் இவர்களுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே செல்கின்றனர். முத்து மற்றும் மீனாவின் லவ் ட்ராக் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் மீனா சீதா மற்றும் வித்யாவுடன் கோவிலை சுற்றி வரும் போது குறுக்கே வரும் முத்துவை சைட் அடித்து அவர் பின்னாடி செல்வது போல ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. இதோ பாருங்க