Web Ad 2

மனோஜ்க்காக ரோகினி செய்த விஷயம், முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

மனோஜ்காக ரோகிணி ஒரு விஷயம் செய்ய, முத்து வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.

SiragadaikkaAasai Serial Today Episode Update 15-02-25
SiragadaikkaAasai Serial Today Episode Update 15-02-25

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் பரசு வீட்டிற்கு வந்து பேசுகின்றனர்.உங்க பொண்ண பார்த்து பேசிட்டு தான் வரோம் அந்த பொண்ணு தெளிவான முடிவு எடுத்து இருக்கு நீங்க சம்மதம் சொன்னா இந்த கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம் என்று சொல்ல பரசு முதலில் தயங்க பிறகு சம்மதம் தெரிவித்து விடுகிறார். உடனே பரசுவின் மனைவி எங்க பெரிய பொண்ண கட்டி கொடுத்து இருக்கிறது பெரிய இடம் சொந்தக்காரங்களா என்ன சொல்லுவாங்களோ ஒன்னு பயமா இருக்கு என்று சொல்ல அதற்கு முத்து சொந்தக்காரங்களுக்காக தான் இப்படி பேசுறீங்களா அவங்க கிட்ட போயி ஒரு லட்ச ரூபா கடன் கேளுங்க கல்யாணத்துக்கு தெருச்சி ஓடிடுவாங்க. பொண்ணு கல்யாணம் வாழ்க்கை முக்கியமா இல்ல சொந்தக்காரர் முக்கியமான பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம் என்று சொல்லுகிறார். என்ன பத்தி உங்களுக்கு தெரியும் நான் எப்படி இருந்தேன் இப்போ மீனா கூட எப்படி வாழ சந்தோஷமா இல்லையா என்றெல்லாம் பேசி ஒரு வழியாக அவர்களை சம்மதிக்க வைத்து விடுகிறார்.

மறுபக்கம் இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே கறிக்கடைக்காரர் மணி இவர்கள் வீட்டுக்கு பேச வருகிறார் கையில் ஸ்வீட் வாங்காமல் எப்படி வருவது என்று கடைக்கு சென்று விட அந்த நேரம் பார்த்து முத்து மீனா அங்கிருந்து சென்று விடுகின்றனர். இருவரும் கிளம்பி பழங்களுடன் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து அவர்கள் அப்பா அம்மாவிடம் பேசுகின்றனர். முதலில் அவர்கள் அம்மா சம்மதம் தெரிவிக்க அவர்கள் அப்பா விருப்பம் இல்லாமல் இருக்கிறார். உடனே முத்து பேசியவர்களை ஒரு வழியாக சமாதானம் செய்கிறார்.

ஒருவழியாக மாப்பிள்ளையின் அப்பாவை முத்து பேசி பேசி சமாதானப்படுத்த கறிக்கடைக்காரர் மணி போன் போட்டு நான் பொண்ணு வீட்ல பேசிட்டேன் எல்லாம் நல்லவங்களா தான் இருக்காங்க பேசி முடிச்சிடலாம் என்று சொல்ல அவர் முத்துமிடம் எங்க மாமாவும் பொண்ணு வீட்டுல தான் போய் விசாரிச்சாரு அவரும் முடிச்சிடலாம்னு சொல்றாரு என்று சொல்ல அப்புறம் என்ன சார் நம் பசங்களோட சந்தோஷம் தான் சார் முக்கியம் என்று சொல்லி தட்டு வாங்கிக் கொள்கின்றனர். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எங்க மாமா வந்துருவாரு என்று சொல்ல இல்லை எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு இன்னொரு வாட்டி பார்த்துக்கொள்ளலாம் நீங்க ஒரு நல்ல நாள் பார்த்து பரசு மாமா வீட்டுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு மருத்துவம் மீனாவும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

மறுபக்கம் மனோஜ் ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்க ஒரு நபர் வருகிறார் அவரிடம் என்ன வாங்க போறீங்க என்ன வேணும் என்று கேட்க நான் எதுவும் வாங்க வரல விக்க வந்திருக்கேன் என்று சொல்லுகிறார் என்ன வைக்கணும் என்று கேட்க என டாட்டூ போடுவேன் என்று கேட்க அதெல்லாம் எனக்கு வேணாம் அதெல்லாம் ரொம்ப வலிக்கும் என்று சொல்லி விடுகிறார் அந்த நேரம் பார்த்து ரோகினி வர எனக்கு ரொம்ப நாளா டேட்டூ போடணும்னு ஆசை நான் போட்டுக்குறேன் என்று கேட்கிறார் ஆனால் மனோஜ் அதெல்லாம் ரொம்ப வலிக்கு ரோகிணி வேணாம் என்று சொல்ல ரோகிணி வலுக்கட்டாயமாக நான் போட்டுத்தான் போறேன் என்று சொல்லுகிறார் பிறகு ரோகிணிக்கு போட்டுவிட மனோஜ் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ரோகிணி என்ன டாட்டூ போட்டார்?மனோஜ் ரியாக்ஷன் என்ன? குடும்பத்தாரிடம் என்ன சொல்லுகின்றனர்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadaikkaAasai Serial Today Episode Update 15-02-25
SiragadaikkaAasai Serial Today Episode Update 15-02-25