Sindhubaadh first review came out : Vijay Sethupathi, Anjali, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Sindhubaadh Movie Review

Sindhubaadh first review came out :

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இம்மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

அண்மையில் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

யுவனின் இசையில் மனதை கொள்ளை கொள்ளும் நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் டிராக் இதோ.!

ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கலால் பட ரிலீஸில் தடங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு இன்று இப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து டிவீட் செய்த இயக்குநர் ரத்னகுமார்,

“மனைவியை தேடி கடல் கடந்து, தடைகள் தாண்டி எதிரிகளை துவம்சம் செய்யும் மரண மாஸ் படமே சிந்துபாத். நீண்ட நாட்களுக்குப் பின் விஜய் சேதுபதி மாஸ் செய்துள்ளார்” என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.