Simbu Weight Loss

Simbu Weight Loss :

AAA, வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களோட தொடர் தோல்விகளுக்கு தன்னோட தோற்றத்தில ஏற்பட்ட மாற்றமும் ஒரு காரணமுங்கறத உணர்ந்த சிம்பு,

அடுத்ததா மாநாடு படத்தில நடிக்கிறதுக்கு முன்னாடி உடல் எடையைக் குறைக்க லண்டம் போயிருந்தாரு.

இப்போ லண்டன்ல இருந்து தன்னோட தம்பி குறளரசன் திருமணத்துக்காக சென்னை திரும்பியிருக்க சிம்பு, 37 நாட்கள்ல அதிரடியா 13 கிலோவ குறைச்சு மறுபடியும் சிக்கான ஒரு உடற்கட்டுக்கு மாறிருக்காரு.

நேற்று சென்னையில நடந்த குறளரசன் – அபீலா அஹ்மத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில பங்கேற்ற சிம்புவோட ஸ்டைலிஷான புகைப்படங்கள் இப்போ இணையத்தில வைரலா பரவிட்டு வருது.

மேலும் சொன்னது போலவே சிம்பு உடல் எடையைக் குறைச்சிட்டதால மே மாசம் வெங்கட் பிரபுவோட மாநாடு படத்தோட படப்பிடிப்பு தொடங்கப்படும்னும் அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டிருக்கு.

இந்த திருமண விழாவிற்கு சூர்யா, சித்தார்த், சீமான், கௌதம் கார்த்திக், வெங்கட் பிரபு என திரையுலகை சேர்ந்த பலர் பங்கேற்றது குறிப்பிடத்தகக்து.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.