சாய் பல்லவியின் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். மேலும் சாய்பல்லவி, சுரேஷ் சக்கரவர்த்தி ,புவன் அரோரா, ஸ்ரீகுமார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது இந்தப் படத்தில் சாய் பல்லவியின் அறிமுக வீடியோவை பட குழு வெளியிட்டு உள்ளது. அதில் சாய் பல்லவி இந்து ரபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.