சிம்பு பேசிய கருத்து பற்றி, மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி..

Web Ads

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் உள்பட பலர் நடிப்பில் வெளியான ‘பைசன்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், உலகளவில் ரூ.60 கோடி வசூலை கடந்திருக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கையில், ‘சிம்பு சார் என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர் சொன்ன விஷயம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் தொடர்ந்து வேலை செய்ய வேலை செய்ய நம்மை அறியாமலேயே அற்புதத்தை நிகழ்த்தக்கூடிய ஒரு ஆளாக நாம் மாறிவிடுவோம்.

Web Ad 2

நாம என்ன செய்தாலும் அது அற்புதத்தை நோக்கி நகர தொடங்கும். அப்படி ஒரு அற்புதம் பைசன் படத்தில் நிகழ்ந்து இருப்பதாக தான் நம்புவதாக சொன்னார்’ என்று மாரி செல்வராஜ் தெரிவித்தார். முன்னதாக ‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, ரஜினிகாந்த், மணிரத்னம் உள்பட பலரும் மாரி செல்வராஜை பாராட்டி இருந்தனர்.

simbu praised bison film and mari selvaraj
simbu praised bison film and mari selvaraj