Simbu in Eswaran Movie

படப்பிடிப்பில் ரசிகர்கள் குவிந்ததால் அவர்களுக்கு சிம்பு கையசைக்க ரசிகர்களை ஒரே ஆரவாரம் செய்து உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Simbu in Eswaran Shooting Spot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க உள்ளன. இதனால் அதற்குள் சுசீந்திரன் இயக்கத்தில் சிறு பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து முடித்து விடலாம் என முடிவு செய்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

ஈஸ்வரன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

நடிகர் சிம்பு தன்னுடைய இடையில் மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக ஸ்டைலாக மாறியிருந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் கூடியதால் சிம்பு அவர்களைப் பார்த்து கையசைத்து உள்ளார்.

சிம்பு கையை அசைத்ததும் ரசிகர்கள் தலைவா என ஆரவாரம் செய்து அந்த இடத்தையே அமர்க்களம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.