கை, கால் செயலிழந்த நடிகருக்கு முதல் ஆளாக உதவியுள்ளார் சிம்பு.
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமாகி அதன் பிறகு வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட 30 படங்களில் நடித்தவர் வெங்கல் ராவ்.
ஆந்திராவை சேர்ந்த இவர் கை, கால் செயலிழந்து அவதிப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. மேலும் வெங்கல் ராவ் தனது மருத்துவ செலவுக்காக உதவி கேட்டு பேசிய வீடியோவும் வைரலானது.
இந்த நிலையில் தற்போது முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ 2 லட்சத்தை மருத்துவ செலவுகளுக்காக வழங்கியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பலரும் சிம்புவை பாராட்டி வருகின்றனர்.