பிக் பாஸ் நிகழ்ச்சியின் காரணமாக சீரியல் களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.
சமீபத்தில் அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது “பனி விழும் மலர்வனம்” 1:00மணிக்கும், “வீட்டுக்கு வீடு வாசப்படி” மூன்று முப்பது மணிக்கு, “நீ நான் காதல்” ஆறு மணிக்கு, “மகாநதி” ஆறு முப்பது மணிக்கு, “ஆஹா கல்யாணம்” மற்றும் “சின்ன மருமகள்” அடுத்தடுத்து ஒளிபரப்பாக உள்ளது.
இந்தத் தகவல் நேரத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.