மணிமேகலை மற்றும் பிரியங்காவின் விவாதத்தை ரீ கிரியேட் செய்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
ஆனால் நான்கு சீசன்களிலும் செஃப்பாக இருந்த வெங்கடேஷ் பட் இந்த சீசனில் வெளியேறினார். அவருக்கு பதிலாக செஃப் தாமு உடன் இணைந்து மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து நடத்தி வருகிறார்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக இருப்பது மணிமேகலை மற்றும் பிரியங்காவின் பிரச்சனை. பலர் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும் ஆதரவாக பேசி வருகின்றனர்.
தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் புகழ் ஆங்கர் செய்வது போல் பேச ராமர் இடையில் வந்து பேசுகிறார்.
அதற்குப் புகழ் இஷ்டம் இருந்தா இரு இல்ல வெளியே போ என்று சொல்லுகிறார் இது மட்டும் இல்லாமல் ஆங்கரை இழிவுபடுத்துறீங்க என்று பேசுகிறார்.
இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.