யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி விழாவில் மேடையை தெறிக்க விட்ட சிம்புவின் வீடியோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சிம்பு. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாக இருக்கும் STR 48 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் மலேசியாவில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக திகழும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு யுவனின் இசையில் அவர் பாடிய சூப்பர் ஹிட் பாடல்களை பாடி, ஆடி மேடையை தெறிக்கவிட்டுள்ளார். வேற லெவல் எனர்ஜியுடன் பெர்ஃபார்மன்ஸ் செய்திருந்த சிம்புவின் வீடியோஸ் தற்போது ரசிகர்களால் இணையதளத்தில் பகிரப்பட்டு பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.

இதோ அந்த வீடியோக்கள்..