Shriya Ghosal Blessed with Baby Boy

பாடகி ஸ்ரேயா கோஷல் அழகிய குழந்தைக்கு அம்மாவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shriya Ghosal Blessed with Baby Boy : சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். பல்வேறு படங்களில் பிசியாக பாடல்களைப் பாடி வரும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நேரத்தில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர்.

இந்த நிலையில் தற்போது பாடகி ஸ்ரேயா கோஷல் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்து இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அம்மாவான ஸ்ரேயா கோஷலுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.